இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (05-02-2019) – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (05-02-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பெப்ரவரி 5 (February 5) கிரிகோரியன் ஆண்டின் 36 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 329 (நெட்டாண்டுகளில் 330) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

62 – இத்தாலியின் பொம்பெயி நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.
1597 – சப்பானின் ஆரம்பகால கிறித்தவர்கள் பலர் அந்நாட்டின் புதிய அரசால் சமூகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1649 – ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.
1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட இரண்டாவது மாநிலமானது.
1782 – ஸ்பானியர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மெனோர்க்கா தீவைக் கைப்பற்றினர்.
1782 – ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1783 – இத்தாலியின் தெற்கே கலபிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,000–50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1818 – காருல் யோவான் சுவீடன், நோர்வே மன்னராக முடிசூடினார்.
1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
1869 – வரலாற்றில் மிகப் பெரும் வண்டல் தங்கம் ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1885 – பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.
1900 – பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1909 – உலகின் முதலாவது செய்ற்கை நெகிழி பேக்கலைட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பெல்ஜிய வேதியியலாளர் லொயோ பேக்லண்டு அறிவித்தார்.
1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.
1918 – செருமனியின் விமானம் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதுவே அமெரிக்காவின் முதலாவது வான்வழி வெற்றியாகும்.
1922 – ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.
1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக ஜமால் அப்துல் நாசிர் நியமிக்கப்பட்டார்.
1960 – ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1971 – அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.
1994 – சாரயேவோவின் சந்தைப் பகுதி ஒன்றில் எறிகணை ஒன்று வெடித்ததில் 60 பேர் வரை உயிரிழந்தனர்.
2000 – செச்சினியாவின் குரோசுனி புறநகரில் உருசியப் படையினர் 60 பொது மக்களைக் கொன்றனர்.
2004 – எயிட்டியில் புரட்சியாளர்கள் கோனாய்விசு நகரைக் கைப்பற்றினர்.

பிறப்புகள்

1840 – ஜான் பாய்டு டன்லப், இசுக்கொட்டியத் தொழிலதிபர் (இ. 1921)
1908 – இல்டன் சகோதரிகள், ஆங்கிலேய ஒட்டிப் பிறந்த இரட்டையர் (இ. 1969)
1918 – வி. தர்மலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1985)
1924 – துரைசாமி சைமன் லூர்துசாமி, இந்தியக் கத்தோலிக்கக் கருதினால் (இ. 2014)
1933 – இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1934 – வெ. யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1989)
1943 – மைக்கேல் மண், அமெரிக்க இயக்குநர்
1948 – டாம் வில்கின்சன், ஆங்கிலேய நடிகர்
1976 – அபிஷேக் பச்சன், இந்திய நடிகர்
1985 – கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்த்துக்கீசக் கால்பந்து வீரர்

இறப்புகள்

1597 – கொன்சாலோ கார்சியா, இந்திய உரோமன் கத்தோலிக்கப் புனிதர் (பி. 1556)
1898 – மு. கா. சித்திலெப்பை, இலங்கைத் தமிழறிஞர் (பி. 1838)
1993 – ஜோசப் எல் மேங்கியூவிஸ், அமெரிக்க இயக்குநர் (பி. 1909)
2000 – டி. ஜி. லிங்கப்பா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1927))
2008 – மகேஷ் யோகி, இந்திய ஆன்மிக குரு (பி. 1918)
2012 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (பி. 1938)
2015 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)

சிறப்பு நாள்

காசுமீர் ஒருமைப்பாடு நாள் (பாக்கித்தான்)
விடுதலை நாள் (சான் மரீனோ)
ஒற்றுமை நாள் (புருண்டி)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply