இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (07-02-2019) – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (07-02-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பெப்ரவரி 7 (February 7) கிரிகோரியன் ஆண்டின் 38 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர்.
1812 – மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.
1845 – இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
1863 – நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
1904 – மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.
1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
1967 – அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர்.
1967 – தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது.
1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
1986 – எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார்.
1990 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
1991 – ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் தெருவில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
2005 – விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
2012 – மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார்.
2013 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது.

பிறப்புகள்

1478 – தாமஸ் மோர், ஐக்கிய இராச்சியத்தின் உயராட்சித் தலைவர் (இ. 1535)
1766 – பிரடெரிக் நோர்த், பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகி, இலங்கையின் 1வது தேசாதிபதி (இ. 1827)
1812 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1870)
1824 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1910)
1864 – சர் பி. எஸ். சிவசுவாமி, இந்திய வழக்கறிஞர், நிருவாகி, அரசியல்வாதி (இ. 1946)
1877 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (இ. 1947)
1902 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
1933 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (இ. 2015)
1940 – டோனி டேன் கெங் யம், சிங்கப்பூரின் 7வது குடியரசுத் தலைவர்
1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கை அரசியல்வாதி (இ. 2014)
1965 – கிரிசு ரொக், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1978 – ஆஷ்டன் குட்சர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாலர், தொழிலதிபர்
1979 – தவக்குல் கர்மான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யேமன் ஊடகவியலாளர்

இறப்புகள்

1878 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1792)
1935 – டேவிட் வைட், அமெரிக்கப் புவியியலாளர் (பி. 1862)
1937 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1864)
1986 – ஏ. ஜி. சுப்புராமன், தமிழக அரசியல்வாதி (பி. 1930)
2001 – பகீரதன், தமிழக எழுத்தாளர்
2008 – குணால், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்

விடுதலை நாள் (கிரெனடா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1974)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply