இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (08-02-2019) – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (08-02-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பெப்ரவரி 8 (February 8) கிரிகோரியன் ஆண்டின் 39 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 (நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1238 – மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர்.
1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார்.
1879 – சிட்னி துடுப்பாட்ட ஆட்டம் ஒன்றில் இடம்பெற்ற கலவரம் ஒன்றில் ஜார்ஜ் ஹரீஸ் தலைமையிலான இங்கிலாந்து துடுப்பாட்ட அணி தாகப்பட்டது.
1885 – முதலாவது அரச-ஆதரவுடனான சப்பானியக் குடியேற்றம் அவாயில் ஆரம்பமானது.
1904 – சப்பானியரின் நீர்மூழ்கிக் குண்டு ஒன்று சீனாவின் லூசென்கோ நகரைத் தாக்கியது. உருசிய-சப்பானியப் போர் ஆரம்பமானது.
1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் சிங்கப்பூரை ஊடுருவியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: டச்சு இராணுவத்தினர் இந்தோனேசியாவின் பஞ்சார்மாசின் நகரை சப்பானியர் கைப்பற்றுவதைத் தடுக்க அந்நகரை தீயிட்டுக் கொளுத்தினர்.
1942 – செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி செருமனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவும் கனடாவும் ரைன் ஆற்றின் மேற்குக் கரையைக் கைப்பற்றும் நோகுடன் வெரிடபிள் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: மிக்கைல் தெவித்தாயெவ் தலைமையில் பத்து சோவியத் கைதிகள் செருமனிய நாட்சி வதைமுகாம் ஒன்றில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்தி தப்பினர்.
1952 – இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக அறிவிக்கப்பட்டார்.
1955 – பாக்கித்தானின் சிந்து மாகாண அரசு நில மானிய முறைமையை ஒழித்தது.
1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
1963 – கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.
1965 – அமெரிக்காவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்சு விமானம் அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 84 பேரும் உயிரிழந்தனர்.
1971 – நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
1974 – 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.
1974 – அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1981 – கிரேக்கத்தில் 21 கால்பந்து விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 21 பார்வையாளர்கள் உயிரிழந்தனர், 55 பேர் காயமடைந்தனர்.
1986 – கனடாவின் ஹிண்டன் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – இசுரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
2005 – ஈழப் போர்: முதல் நாள் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
2010 – ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைகளில் இடம்பெற்ற தொடர் பனிச்சரிவுகளில் சிக்கி 172 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1641 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (இ. 1720)
1700 – டேனியல் பெர்னூலி, டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1782)
1819 – ஜான் ரஸ்கின், ஆங்கிலேய எழுத்தாளர், ஓவியர் (இ. 1900)
1825 – என்றி வால்டர் பேட்ஃசு, ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர், நாடுகாண் பயணி (இ. 1892)
1828 – ழூல் வேர்ண், பிரான்சியக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1905)
1834 – திமீத்ரி மெண்டெலீவ், உருசிய வேதியியலாளர் (இ. 1907)
1850 – கேட் சோப்பின், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1904)
1897 – சாகீர் உசேன், இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் (இ. 1969)
1903 – துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் முதலாவது பிரதமர் (இ. 1990)
1921 – மு. மு. இஸ்மாயில், தமிழக நீதியரசர், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2005)
1928 – லூசு மோகன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2012)
1928 – விச்சிசுலாவ் தீகனொவ், சோவியத் உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (இ. 2009)
1937 – ஏ. எச். எம். அஸ்வர், இலங்கை அரசியல்வாதி (இ. 2017)
1941 – ஜக்ஜீத் சிங், இந்தியப் பாடகர் (இ. 2011)
1955 – ஜான் கிரிஷாம், அமெரிக்க எழுத்தாளர்
1960 – பெனிக்னோ அக்கீனோ III, பிலிப்பீன்சின் 15வது அரசுத்தலைவர்
1963 – முகமது அசாருதீன், இந்தியத் துடுப்பாளர், அரசியல்வாதி
1968 – கேரி கோல்மன், அமெரிக்க நடிகர் (இ. 2010)

இறப்புகள்

1265 – உலேகு கான், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1218)
1587 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (பி. 1542)
1725 – முதலாம் பேதுரு, உருசியப் பேரரசர் (பி. 1672)
1957 – வால்தெர் பொதே, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1891)
1957 – ஜான் வான் நியுமேன், அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1903)
1971 – கே. எம். முன்ஷி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1887)
1974 – பிரிட்சு சுவிக்கி, சுவீடன் வானியலாளர் (பி. 1898)
1979 – டென்னிஸ் கபார், நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1900)
1993 – நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1920)
2005 – அரியநாயகம் சந்திரநேரு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மனித உரிமை ஆர்வலர்
2007 – ஆன்னா நிக்கோல் இசுமித், அமெரிக்க நடிகை (பி. 1967)
2007 – இயான் ஸ்டீவன்சன், கனடிய-அமெரிக்க உளவியல் மருத்துவர் (பி. 1918)
2014 – பிரேம்ஜி ஞானசுந்தரம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் (பி. 1930)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply