இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (11-02-2019) – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (11-02-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பெப்ரவரி 11 (February 11) கிரிகோரியன் ஆண்டின் 42 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 323 (நெட்டாண்டுகளில் 324) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1534 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி இங்கிலாந்து திருச்சபையினால் அங்கீகரிக்கப்பட்டார்.
1659 – கோபனாவன் மீது சுவீடன் படைகள் நடத்திய தாக்குதல் பெரும் இழப்புடன் முறியடிக்கப்பட்டது.
1790 – அடிமை முறையை ஒழிக்குமாறு நண்பர்களின் சமய சமூகம் அமெரிக்கக் காங்கிரசில் முறையிட்டது.
1802 – சின்ன மருது மகன் துரைச்சாமி உட்பட 73 பேர் மலாயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) நாடு கடத்தப்பட்டனர்.
1823 – மால்டாவில் வல்லெட்டா நகரில் கிறித்தவக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட விழா நெரிசலில் 110 மாணவர்கள் உயிரிழந்தனர்.
1826 – இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
1856 – அவத் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கைப்பற்றியது. அவத் மன்னர் வாஜித் அலி சா கைது செய்யப்பட்டு பின்னர் கொல்கத்தாவிற்கு நாடுகடத்தப்பட்டார்.
1858 – பெர்னதெத் சுபீரு லூர்து அன்னையை முதற்தடவையாகக் கண்ணுற்ற நிகழ்வு பிரான்சின் லூர்து நகரில் இடம்பெற்றது.
1873 – எசுப்பானிய மன்னர் முதலாம் அமேதியோ முடி துறந்தார்.
1929 – வத்திக்கான் நகர் உருவாக்குவதற்கான உடன்பாட்டை இத்தாலியும் திரு ஆட்சிப்பீடமும் எட்டின.
1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
1938 – பிபிசி தொலைக்காட்சி தனது முதலாவது அறிபுனை தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஐரோப்பாவில் நேச நாடுகளின் இராணுவத்திற்கு தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1953 – சோவியத் ஒன்றியம் இசுரேல் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது.
1959 – தெற்கின் அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு (பின்னர் தெற்கு யேமன்) ஐக்கிய இராச்சியத்தின் காப்பு நாடாக உருவாக்கப்பட்டது.
1960 – சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1964 – கிரேக்கரும் துருக்கியரும் சைப்பிரசின் லிமாசோல் நகரில் போரிட்டனர்.
1971 – பன்னாட்டுக் கடற்பரப்பில் அணுக்கரு ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் கையெழுத்திட்டன.
1973 – வியட்நாம் போர்: வியட்நாமில் இருந்து முதல் தொகுதி அமெரிக்கப் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
1978 – அரிசுட்டாட்டில், வில்லியம் சேக்சுபியர், சார்லஸ் டிக்கின்ஸ் ஆகியோரின் ஆக்கங்களுக்கான தடையை சீனா தளர்த்தியது.
1979 – அயத்தொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானியப் புரட்சி வெற்றி பெற்றது.
1990 – 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா கேப் டவுன் விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றார்.
1996 – குமாரபுரம் படுகொலைகள்: இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
1997 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைப் பழுது பார்க்கும் டிஸ்கவரி விண்ணோடம் புறப்பட்டது.
2008 – கிழக்குத் திமோர் கிளர்ச்சிப் படைகளின் தாக்குதலில் அரசுத்தலைவர் ஒசே ரமோசு-ஓர்ட்டா படுகாயமடைந்தார். கிளர்ச்சித் தலைவர் அல்பிரடோ ரெய்னார்டோ கொல்லப்பட்டார்.
2011 – ஒசுனி முபாரக்கைப் பதவி விலகக் கோரி எகிப்தியப் புரட்சி ஆரம்பமானது.
2014 – அல்சீரியாவின் கிழக்கே சரக்கு விமானம் ஒன்று மலைப்பகுதி ஒன்றில் வீழ்ந்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1847 – தொமஸ் அல்வா எடிசன், ஒளிக்குமிழ், கிராமபோன் ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1931)
1865 – எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை, இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர், வானியலாளர் (இ. 1925)
1904 – எஸ். நடேசன், இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி, மேலவை உறுப்பினர் (இ. 1986)
1909 – ஜோசப் எல் மேங்கியூவிஸ், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1993)
1911 – வ. சுப்பையா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இ. 1993)
1917 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
1921 – அந்தோனி படியாரா, இந்தியக் கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (இ. 2000)
1924 – வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் கூத்து நடிகர் (இ. 1989)
1947 – யுகியோ அட்டொயாமா, சப்பானின் 60வது பிரதமர்
1964 – சேரா பேலின், அமெரிக்க அரசியல்வாதி, அலெஸ்காவின் 9வது ஆளுநர்
1969 – ஜெனிபர் அனிஸ்டன், அமெரிக்க நடிகை
1992 – டெய்லர் லாட்னர், அமெரிக்க நடிகர், தற்காப்புக் கலைஞர்

இறப்புகள்

824 – முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை)
1358 – அலாவுதின் பாமன் சா, தக்காணப் பீடபூமியின் 1வது பாமினி சுல்தான்
1650 – ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1596)
1693 – ஜான் டி பிரிட்டோ, இயேசு திருச்சபை மதப்போதகர் (பி. 1647)
1755 – பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி, இத்தாலிய தொல்லியலாளர் (பி. 1675)
1942 – ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (பி. 1884)
1946 – மா. சிங்காரவேலர், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1860)
1948 – செர்கீ ஐசென்ஸ்டைன், உருசியத் திரைப்பட இயக்குநர் (பி. 1898)
1956 – செர்கேய் பிளாசுக்கோ, சோவியத், உருசிய வானியலாளர் (பி. 1870)
1963 – சில்வியா பிளாத், அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1932)
1968 – தீனதயாள் உபாத்தியாயா, இந்திய ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1916)
1974 – கண்டசாலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1922)
1977 – பக்ருதின் அலி அகமது, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (பி. 1905)
1978 – ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)
1979 – மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை, கருநாடக வயலின் இசைக் கலைஞர் (பி: 1912)
1985 – செ. சுந்தரலிங்கம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1895)
1994 – வின்சென்ட் விகில்சுவொர்த், ஆங்கிலேய உயிரியலாளர், பூச்சியியலாளர் (பி. 1899)
2001 – ஜெய்கணேஷ், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1946)
2006 – பெக்கி கிரிப்ஸ் அப்பையா, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1921)
2008 – பாட்சி ஓ’கானெல் செர்மன், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1930)
2010 – ஷாஹித் அஸ்மி, இந்திய வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர் (பி. 1977)
2010 – உ. ரா. வரதராசன், இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1945)
2012 – விட்னி ஊசுட்டன், அமெரிக்கப் பாடகி, நடிகை (பி. 1963)
2016 – பூ. ம. செல்லத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)

சிறப்பு நாள்

உலக நோயாளர் நாள் (கத்தோலிக்க திருச்சபை)
கண்டுபிடிப்பாளர் நாள் (ஐக்கிய அமெரிக்கா)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply