இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (13-02-2019) – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (13-02-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பெப்ரவரி 13 (February 13) கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1322 – இங்கிலாந்தின் எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
1542 – முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தூக்கிலிடப்பட்டார்.
1633 – திரிபுக் கொள்கை விசாரணையை எதிர்கொள்ள கலீலியோ கலிலி ரோம் நகர் வந்தார்.
1689 – வில்லியம், இரண்டாம் மேரி ஆகியோர் இங்கிலாந்தின் கூட்டாட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
1739 – ஈரானிய ஆட்ட்சியாளர் நாதிர் ஷாவின் படையினர் இந்தியாவின் முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தனர்.
1755 – ஜாவாவின் மடாரம் பேரரசு “யோக்யகர்த்தா சுல்தானகம்” மற்றும் “சுரகர்த்தா சுல்தானகம்” என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1880 – தொமஸ் அல்வா எடிசன் எடிசன் விளைவை அவதானித்தார்.
1913 – 13வது தலாய் லாமா திபெத்திய விடுதலையை அறிவித்தார்.
1914 – பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.
1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு தனது தலைநகரை கொல்கத்தாவில் இருந்து புது தில்லிக்கு நகர்த்தியது.
1934 – சோவியத் நீராவிக்கப்பல் செலியூன்ஸ்கின் 111 பேருடன் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: புடாபெஸ்ட் நகர முற்றுகை முடிவுக்கு வந்தது. செருமனிய, அங்கேரிப் படைகள் செஞ்சேனையிடம் சரணடைந்தன.
1960 – பிரான்சு வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி, அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 4வது நாடானது.
1971 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.
1978 – சிட்னியில் ஹில்ட்டன் ஓட்டலுக்கு வெளியே பாரவூர்தி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர்.
1983 – இத்தாலி, துரின் நகரில் திரையரங்கு ஒன்று தீப்பற்றியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
1984 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக கான்ஸ்டன்டீன் செர்னென்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985 – இலங்கையில் கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
1991 – வளைகுடாப் போர்: பகுதாது நகரில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது கூட்டு நாடுகளின் குண்டுகள் வீழ்ந்ததில் 400 ஈராக்கியப் பொதுமக்கள் கொலலப்பட்டனர்.
1996 – நேப்பாளத்தில் மாவோயிசப் பொதுவுடமைவாதிகளால் நேபாள மக்கள் புரட்சி ஆரம்பிக்கப்பட்டது.
2001 – எல் சல்வடோரில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
2004 – அண்டவெளியின் மிகப்பெரிய வைர, வெண்குறு விண்மீன் பிபிஎம் 37093 கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
2008 – ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக ஆஸ்திரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார்.

பிறப்புகள்

1672 – எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (இ. 1731)
1766 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளியலாளர் (இ. 1834)
1805 – டிரிஃக்லெ, செருமானிய கணிதவியலாளர் (இ. 1859)
1835 – மிர்சா குலாம் அகமது, இந்திய மதத் தலைவர் (இ. 1908)
1879 – சரோஜினி நாயுடு, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1949)
1910 – வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)
1915 – ஆங் சான், பர்மாவின் 5வது பிரதமர் (இ. 1947)
1920 – அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)
1933 – பவுல் பியா, கமரூனின் 2வது அரசுத்தலைவர்
1934 – வெ. யோகேசுவரன், இலங்கை அரசியல்வாதி (இ. 1989)
1937 – ரூப்பையா பண்டா, சாம்பிய அரசுத்தலைவர்
1979 – ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக், நோர்வே நாட்டுக் கொலையாளி

இறப்புகள்

1883 – ரிச்சார்ட் வாக்னர், செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. 1813)
1950 – செய்குத்தம்பி பாவலர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1874)
1973 – ஒய். வி. ராவ், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1903)
2009 – கிருத்திகா, தமிழக எழுத்தாளர்
2014 – பாலு மகேந்திரா, இலங்கை-இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (பி. 1939)
2016 – ஓ. என். வி. குறுப்பு, இந்தியக் கவிஞர் (பி. 1931)
2016 – ஏ. நடராஜன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)

சிறப்பு நாள்

குழந்தைகள் நாள்
உலக வானொலி நாள்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply