இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (24-02-2019) – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (24-02-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பெப்ரவரி 24 (February 24) கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி திருத்தந்தை 13வது கிரெகரியினால் ஆணை ஓலை மூலம் அறிவிக்கப்பட்டது.
1739 – ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷாவின் இராணுவத்தினர் முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தனர்.
1809 – இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது.
1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர். முடிவுக்கு வந்தது.
1848 – பிரான்சின் லூயி-பிலிப் மன்னர் முடிதுறந்தார்.
1863 – அரிசோனா ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமாக அமைக்கப்பட்டது.
1875 – ஆத்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டு ஒன்றில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர்.
1881 – சீனாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1895 – கியூபாவில் புரட்சி வெடித்ததை அடுத்து விடுதலைக்கான கியூபா போர் ஆரம்பமானது. இது 1898 இல் எசுப்பானிய அமெரிக்கப் போருடன் முடிவுக்கு வந்தது.
1918 – எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.
1920 – நாட்சி கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாகிர் பாசா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.
1981 – கிரேக்கத்தில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – வடக்கு மொரோக்கோவில் 6.3 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 628 பேர் உயிரிழந்தனர்.
2007 – மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2008 – 32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார்.
2009 – வாட்சப் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.

பிறப்புகள்

1886 – ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய இலங்கை-சிங்கப்பூர்த் தமிழர்
1928 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் (இ. 1977)
1942 – காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், இந்திய மெய்யியலாளர்
1944 – டேவிட். ஜே. வைன்லேண்டு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1946 – டெர்ரி வினோகிராட், அமெரிக்கக் கணிப்பொறி அறிவியலாளர், உளவியலாளர்
1948 – செ. செயலலிதா, கன்னட-தமிழக நடிகை, தமிழ்நாட்டின் 16வது முதலமைச்சர் (இ. 2016)
1950 – ஸ்டீவ் மெக்குரி, அமெரிக்க ஊடகவியலாளர்
1955 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 2011)
1956 – ஜூடித் பட்லர், அமெரிக்க மெய்யியலாளர்
1967 – பிறையன் சிமித், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய இயற்பியலாளர்
1977 – பிளாய்ட் மேவெதர், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்

இறப்புகள்

1810 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1731)
1815 – ராபர்ட் ஃபுல்டன், அமெரிக்கப் பொறியாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1765)
1969 – பா. தாவூத்ஷா, தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1885)
1983 – ச. வெள்ளைச்சாமி, தமிழக சமூக ஆர்வலர், கொடை வள்ளல் (பி. 1897)
1986 – ருக்மிணி தேவி அருண்டேல், தமிழக நடனக் கலைஞர், கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)
1990 – மால்கம் போர்ப்ஸ், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)
1996 – அன்னா லாறினா, உருசியப் புரட்சியாளர், எழுத்தாளர் (பி. 1914)
2001 – கிளாடு சேனன், அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியாளர் (பி. 1916)
2011 – அனந்து பை, இந்திய எழுத்தாளர் (பி. 1929)
2015 – மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)
2018 – ஸ்ரீதேவி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1963)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (எசுத்தோனியா, உருசியாவிடம் இருந்து 1918)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply