இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (25-02-2019) – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (25-02-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பெப்ரவரி 25 (February 25) கிரிகோரியன் ஆண்டின் 56 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 309 (நெட்டாண்டுகளில் 310) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1797 – வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.
1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
1848 – பிரான்சின் இடைக்கால அரசு தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது.
1875 – பேரரசி டோவாகர் சிக்சியின் தலைமையில் சீனாவில் சிங் அரசமரபு ஆரம்பமானது.
1921 – ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி உருசியாவின் கம்யூனிசப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1925 – சோவியத் ஒன்றியத்திற்கும் சப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.
1932 – இட்லர் செருமனியின் குடியுரிமையைப் பெற்றார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: துருக்கி செருமனி மீது போரை அறிவித்தது.
1947 – புருசியா கலைக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் புருசிய அரசு 1932 இல் கலைக்கப்பட்டு விட்டது.
1948 – செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
1956 – சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார்.
1968 – வியட்நாம் போர்: வியட்நாமில் 135 ஆ மை கிராம மக்கள் தென் கொரியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
1980 – சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
1986 – பிலிப்பீன்சு தலைவர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அரசுத்தலைவர் ஆனார்.
1988 – மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி ஏவப்பட்டது.
1991 – வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவூதி அரேபியாவின் டாகுரான் நகரில்ல் அமெரிக்க இராணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1991 – பனிப்போர்: வார்சா ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
1992 – அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.
1994 – மேற்குக் கரை நகரான எபிரோனில் பிதாப்பிதாக்களின் குகை மசூதியில் இசுரேலியர் ஒருவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலத்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலஸ்தீனர்களும் 9 இசுரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.
2007 – ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் அப்பால் எறியப்பட்டது.
2015 – ஆப்கானித்தானின் வடகிழக்கில் இடம்பெற்ற பனிச்சரிவில் 310 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1304 – இப்னு பதூதா, மொரோக்கோ கல்வியாளர், நாடுகாண் பயணி
1778 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெருவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1850)
1866 – பெனிடெட்டோ குரோசே, இத்தாலிய இலக்கியவாதி, வரலாற்றாசிரியர், அரசியல்வாதி (இ. 1952)
1869 – போபஸ் ஆரன் தியோடர் லெவினி, உருசிய-அமெரிக்க உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1940)
1894 – மெகர் பாபா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1969)
1897 – வேதரத்தினம் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1961)
1901 – அ. நாகலிங்கம், ஈழத்து எழுத்தாளர், வழக்கறிஞர் (இ. 1979)
1915 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (இ. 2006)
1925 – ஜானகி ஆதி நாகப்பன், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் (இ. 2014)
1971 – சீன் ஆஸ்டின், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1973 – கௌதம் மேனன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்
1974 – திவ்யா பாரதி, இந்திய நடிகை (இ. 1993)
1979 – பிரேம்ஜி அமரன், தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்

இறப்புகள்

1723 – கிறிஸ்டோபர் ரென், புனித பவுல் தேவாலயத்தை வடிவமைத்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632)
1877 – ஜங் பகதூர் ராணா, நேபாள ஆட்சியாளர் (பி. 1816)
1932 – யூலியெத்தா லாந்தேரி, இத்தாலிய அர்கெந்தீன மருத்துவர், கட்டற்ற சிந்தனையாளர் (பி. 1873)
1936 – அன்னா பொச், பெல்சிய ஓவியர் (பி. 1848)
1942 – அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (பி. 1881)
1950 – ஜார்ஜ் மினாட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1885)
1965 – விராலிமலை சண்முகம், இந்தி எதிர்ப்புப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1943)
2001 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908)
2004 – பி. நாகிரெட்டி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், (பி. 1912)
2014 – பாக்கோ தே லூசீயா, எசுப்பானிய இசை அமைப்பாளர், கித்தார் கலைஞர் (பி. 1947)
2015 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)
2015 – யுஜினி கிளார்க், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1922)
2015 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)
2015 – சுகுணா புருசோத்தமன், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1941)
2016 – ஆல்பிரட் இ மான், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1925)
2017 – தவக்களை, தமிழ்த் திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்

மக்கள் சக்தி நாள் (பிலிப்பீன்சு)
சோவியத் ஆக்கிரமிப்பு நாள் (ஜோர்ஜியா)
புரட்சி நாள் (சுரிநாம்)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply