இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (28-02-2019) – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (28-02-2019)

இந்த செய்தியைப் பகிர்க

பெப்ரவரி 28 (February 28) கிரிகோரியன் ஆண்டின் 59 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 (நெட்டாண்டுகளில் 307) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1525 – அசுட்டெக் மன்னர் குவாவுத்தேமொக் எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெசின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
1700 – சுவீடனில் இன்று மார்ச் 1. சுவீடிய நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
1710 – சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படையினர் ஹெல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவீடன் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
1784 – ஜோன் உவெசுலி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
1844 – பொட்டாமக் ஆற்றில் பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு அமெரிக்க அமைச்சர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
1867 – வத்திக்கான் உடனான 70-ஆண்டுகால தூதரக உறவை அமெரிக்கா முறித்துக் கொண்டது. 1984 ஆம் ஆண்டிலேயே உறவு புதுப்பிக்கப்பட்டது.
1897 – மடகஸ்காரின் கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரான்சியப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
1922 – எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
1935 – வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் ஊஸ்டன் என்ற கப்பலும், ஆத்திரேலியாவின் பேர்த் கப்பலும் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் சப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் முறையே 693 பேரும், 375 பேரும் கொல்லப்பட்டனர்.
1947 – தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1954 – என்டிஎஸ்சி தரத்துடன் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.
1958 – கென்டக்கியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1975 – லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகைவண்டி விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
1986 – சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டாக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1991 – முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.
1997 – வடக்கு ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் இறந்தனர்.
1997 – ஜிஆர்பி 970228 என்ற மிகவும் ஒளிர்வான காம்மா கதிர்கள் 80 செக்கன்களுக்கு பூமியத் தாக்கியது.
1998 – கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
2002 – குஜராத் வன்முறை 2002: அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.
2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார். 1415 இல் பன்னிரண்டாம் கிரகோரி பதவி துறந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பணிதுறப்பு இதுவாகும்.

பிறப்புகள்

1893 – கே. ஆர். ராமநாதன், இந்திய இயற்பியலாளர், வானிலையியலாளர் (இ. 1984)
1901 – லைனசு பாலிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1994)
1904 – மரே எமெனோ, அமெரிக்க மொழியியலாளர் (இ. 2005)
1921 – தி. ஜானகிராமன், தமிழக எழுத்தாளர் (இ. 1982)
1926 – சுவெத்லானா அலிலுயேவா, உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2011)
1927 – சௌந்தரா கைலாசம், தமிழக எழுத்தாளர் (இ. 2010)
1928 – டி. ஜெ. அம்பலவாணர், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயர் (இ. 1997)
1929 – பிராங்க் கெரி, கனடிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்
1929 – ரங்கசாமி சீனிவாசன், இந்திய-அமெரிக்க வேதியியலாளர், கண்டுபிடிப்பாளர்
1931 – துரை விஸ்வநாதன், ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998)
1931 – சி. நாகராஜா, யாழ்ப்பாண மாநகர முதல்வர் (இ. 2008)
1933 – சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)
1953 – பால் கிரக்மேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1957 – ஜான் டர்டர்ரோ, அமெரிக்க நடிகர், இயக்குநர்
1969 – உ. ஸ்ரீநிவாஸ், தமிழக மேண்டலின் இசைக் கலைஞர் (இ. 2014)
1976 – அலி லார்டேர், அமெரிக்க நடிகை
1979 – ஸ்ரீகாந்த், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1980 – பத்மபிரியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1869 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், வரலாற்றாளர் (பி. 1790)
1936 – கமலா நேரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1899)
1963 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவர் (பி. 1884)
2006 – ஓவன் சேம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1920)
2010 – சுசிரோ அயாசி, சப்பானிய வானியற்பியலாளர் (பி. 1920)
2016 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)
2016 – குமரிமுத்து, தமிழ்த் திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்

அமைதி நினைவு நாள் (சீனக் குடியரசு)
கலேவலா நாள், (பின்லாந்து)
தேசிய அறிவியல் நாள் (இந்தியா)
ஆசிரியர் நாள் (அரபு நாடுகள்)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply