இன்றைய திருக்குறள் (22-04-2019) – Sudar FM

இன்றைய திருக்குறள் (22-04-2019)

இந்த செய்தியைப் பகிர்க

குறள் 79:
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:
அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?.

மு.வரதராசனார் உரை:
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..

சாலமன் பாப்பையா உரை:
குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?.

பரிமேலழகர் உரை:
யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் – ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.? (புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் ‘எவன் செய்யும்’ என்றார். உறுப்புப் போறலின் ‘உறுப்பு’ எனப்பட்டன ‘யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு’ என்று உரைப்பாரும் உளர்.அதற்குஇல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.

மணக்குடவர் உரை:
உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மனத்தின் உறுப்பாகிய அன்பில்லாதவர்களுக்கு மற்றைப் புறத்திலே இருக்கும் உறுப்புக்கள் எல்லாம் அறம் செய்தற்கு என்ன உதவியினைச் செய்யும்?.

Translation:
Though every outward part complete, the body’s fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed?.

Explanation:
Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply