புகழ்பெற்ற கோடீஸ்வரர் Warren Buffett இன் வெற்றிக்கான 12 அறிவுரைகள் – Sudar FM

புகழ்பெற்ற கோடீஸ்வரர் Warren Buffett இன் வெற்றிக்கான 12 அறிவுரைகள்

இந்த செய்தியைப் பகிர்க

உலக பணக்காரர்கள் வரிசையில் 3 ஆம் இடத்தில் இருக்கும் Warren Buffett, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது சாதூர்யம் மற்றும் கடின உழைப்பால் இன்று 89 Billion அமெரிக்க டாலர்களுக்கு அதிபதியாக மாறியுள்ளார், அவர் வாழ்க்கையின் வெற்றிக்காகச் சொன்ன 12 அறிவுரைகளை நாம் இங்கு பாக்கலாம்.

1. நீங்கள் ஒருவிடயத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் இந்த இரண்டு விதிகளையும் கட்டாயம் பின்பற்றுங்கள்

“விதி 01 : எக்காரணம் கொண்டும் நீங்கள் முதலீடு செய்பவற்றில் உங்கள் பணத்தினை இழந்துவிடாதீர்கள்.

விதி 02 : முதலாவது விதியை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்”

எந்த பொருளில் முதலீடு செய்தால் உங்கள் பாக்கெட்டிற்கு பணம் வருகின்றதோ அந்த பொருளில் மட்டுமே முதலீடு செய்யுங்கள் என்கின்றார் Buffett

2. குறைந்த ஆபத்தில் அதிக வருமானம் தரக்கூடிய வணிகத்தில் முதலீடு செய்யுங்கள்.

“உங்களால் புரிந்துகொள்ள முடியாத வணிகத்தின் மூலமே ஆபத்துக்கள் வருகின்றான. அவ்வாறன வணிகத்தில் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள்”

3. உங்களுக்குப் பொருத்தமான மக்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள்

“உங்களைவிட திறமையானவர்களிடம் பழகுவது மிகச்சிறந்தது. அவ்வாறு நீங்கள் செய்யும்போது அவர்களின் வழியில் நீங்கள் செல்ல ஆரம்பிப்பீர்கள்”

4. இறந்தகாலம் மற்றும் எதிர்காலம்

“எப்போதும் இறந்தகாலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காது எதிர்காலத்தை திட்டமிட ஆரம்பியுங்கள்”

5. எல்லையில்லா கனவுகள் காண்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே

“நான் பணக்காரனாகப் போகின்றேன் என்பதை சிறுவயதிலேயே அறிந்திருந்தேன். ஒரு சிறிய அளவு கூட அதில் நான் சந்தேகம் கொண்டது கிடையாது”

6. நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்

“நீண்ட காலத்திற்கு உங்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் விடயங்களில் உங்கள் பணம் மற்றும் நேரத்தை முதலீடு செய்யுங்கள்”

7. சிலே நேரங்களில் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது

“உங்களுக்கு வாய்ப்புக்கள் வரும்போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என் வாழ்வில் சில தருணங்களில் பணமீட்டுவதற்கு எந்த யோசனையும் வராமல் இருக்கும், அவ்வாறான நேரத்தில் தெளிவான யோசனை ஒன்று கிடைத்தால் அதனைத் தொடர்ந்து செய்வேன், இல்லையென்றால் எதையும் செய்யாமல் இருப்பேன்”

8. இல்லை என்று சொல்லப் பழகுங்கள்

“வெற்றியாளர்களுக்கும் உண்மையிலேயே வெற்றிபெற்றவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசம், உண்மையிலே வெற்றிபெற்றவர்கள் கிட்டத்தட்ட எல்லா விடயங்களுக்கும் இல்லை (முடியாது) என்றே சொல்லியிருப்பார்கள்”

9. உங்களுக்கு விருப்பமானதையே செய்யுங்கள்

“வணிகத்தைப் பொறுத்தவரை அதிகம் வெற்றியடைபவர்கள் தாங்கள் விரும்பியவற்றை வணிகமாக்கிக் கொண்டவர்களே”

10. வேலை மற்றும் விளைவு

“நீங்கள் தொடர்ந்து ஒரே வேலையைச் செய்துகொண்டிருந்தால், அதன்மூலம் மீண்டும் மீண்டும் ஒரே விளைவினையே பெறுவீர்கள்”

இந்த இடத்தில் Buffett உங்கள் வியாபாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய அடிக்கடி அதனுள் புதுமைகளைப் புகுத்தவேண்டும் என்கின்றார்

11. உங்கள் நேரத்தில் முழு அதிகாரத்தையும் நீங்களே வைத்திருங்கள்

“உங்கள் நேரத்தில் முழு அதிகாரத்தையும் நீங்களே வைத்திருக்க வேண்டும், நீங்கள் மற்றவர்களிடம் முடியாது என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதவரை இது உங்களுக்கு கடினமானதே. மற்றவர்கள் உங்கள் வாழ்வின் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த என்றும் அனுமதிக்காதீர்கள்”

12. உங்களை வளர்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துங்கள்

“நீங்கள் மேற்கொள்ளும் மிக முக்கிய முதலீடு, நீங்கள் உங்களில் செய்யும் முதலீடு”

இந்த இடத்தில் Buffett ஒரு புத்தகத்தை படிப்பதற்காகவோ அல்லது ஒரு நல்ல விடயத்தைத் தெரிந்து கொள்வதற்காகவோ உங்கள் நேரத்தை நீங்கள் செலவிடுவதே உங்கள் வாழ்வின் மிகப்பெரிய முதலீடு என்கின்றார். இதன் மூலமே உங்கள் ஆளுமைகள் மற்றும் திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply