சைனாவின் முதன்மைக் கோடீஸ்வரர் Jack Ma வின் வெற்றிக்கான 8 விதிகள் – Sudar FM

சைனாவின் முதன்மைக் கோடீஸ்வரர் Jack Ma வின் வெற்றிக்கான 8 விதிகள்

இந்த செய்தியைப் பகிர்க

தொழில் முனைவோரில் Jack Ma வினைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. வெறும் $10 மாதவருமானத்திற்கு வேலை செய்தவர் தற்போது 42 Billion அமெரிக்க டாலர்கள் சொத்துமதிப்புள்ள China வின் முதன்மை கோடீஸ்வரர்.. தன் வெற்றிக்கு முக்கியகாரணமாக Jack Ma சொன்ன 8 விடயங்களைப் பற்றிப் பார்க்கலாம்

1. புறக்கணிப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

உங்களையோ அல்லது உங்கள் முயற்சியையோ ஒருவர் புறக்கணிப்பது என்பது மிகவும் சாதாரண விடயம். உலகிலுள்ள அனைத்து மக்களும் ஒருபோதும் ஒருவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே நீங்கள் புறக்கணிக்கப்படும்போது மனம் தளராது உங்கள் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பை மென்மேலும் அதிகரிக்கவேண்டும் என்பதே Jack Ma மிகவும் வலியுறுத்தும் விடயம்..

2. உங்கள் கனவுகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் வணிகத்தை முதல் நாள் ஆரம்பிக்கும்போது அதை எந்த நிலைமைக்கு கொண்டுபோக வேண்டும் என்று கனவு கண்டீர்களோ, அதே கனவை ஒவ்வொரு நாளும் உங்கள் மனதில் நிறுத்திவைத்து உங்கள் வணிகத்தை நடத்தவேண்டும் என்கின்றார் Jack Ma.

3. உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரத்தில் எப்போதும் கவனமாக இருங்கள்

எப்போதும் ஒரு வணிகம் ஆரம்பிக்கும்போது அது மக்களுக்கு அதிகம் பயனுடைய சேவைகளை வழங்குவதிலேயே குறியாக இருக்கும், இருபினும் காலம் செல்லச்செல்ல அதிக பணமீட்டவேண்டும் என்ற எண்ணத்தில் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்க அவ்வணிகம் தவறிவிடுகின்றது. இவ்வாறு செயலாற்றும் வியாபாரங்களால் எப்போதும் சந்தையில் நிலைத்துநிற்க முடியாது என்கிறார் Jack Ma

4. சிறுமையானவர்களைப் புறக்கணியுங்கள்

நீங்கள் ஒரு விடயத்தை ஆரம்பிக்கும்போது உங்களைச் சுற்றியுள்ள பலர் இது உன்னால் முடியாது, இது சாத்தியமற்றது, இது உனது தகுதிக்கு மிகவும் அதிகமானது என பல்வேறு குறைபாடுகளைக் கூறிக்கொண்டே இருப்பார்கள். எனினும் நீங்கள் ஆரம்பிக்கும் விடயம் உண்மையிலே உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பிரயோசனமானதாக இருக்கும் என நீங்கள் கருதினால் குறை கூறுபவர்களைப் புறக்கணித்துவிட்டு அதனை ஆரம்பியுங்கள்.

5. உங்களைச் சுற்றியுள்ளவற்றில் இருந்து ஊக்கம் அடைபவராக இருங்கள்

திரைப்படங்களில் இருந்தே தனக்குத் தேவையான ஊக்கத்தை எடுத்துக்கொள்வதாக சொல்கின்றார் Jack Ma

தனக்குப் பெருமளவு துன்பங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் Forrest Gump திரைப்படத்தைப் பார்ப்பதாகவும், Bodyguard என்ற திரைப்படத்திலிருந்தே மக்களிடம் பேசும் முறையைக் கற்றுக்கொண்டதாகவும் கூறுகின்றார் இந்த கோடீஸ்வரர்.

6. வாடிக்கையாளர்களுக்கே எப்போதும் முதலிடம்

உங்கள் வணிகத்தின் வாடிக்கையாளர்களே உங்களுக்கு பணத்தைக் கொண்டுவருபவர்கள். எனவே உங்கள் நிறுவனம் எப்போதும் உங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்வதாக இருத்தல் வேண்டும் என்கின்றார் Jack Ma

7. குறை கூறாதீர்கள், குறைகளில் இருக்கும் வாய்ப்புக்களைக் கண்டுகொள்ளுங்கள்

எதற்கெடுத்தாலும் குறை கூறிக்கொண்டு திரியாதீர்கள், மக்கள் அதிகமாக எந்த விடயத்தில் குறை கூறுகின்றார்களோ அந்த விடயத்தை கண்டுபிடித்து அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

8. உங்கள் வணிகத்தில் அதீத ஆர்வம் கொண்டவராக இருங்கள்

இவ்வாறு அதீத ஆர்வம் இருந்தால் மட்டுமே உங்கள் வியாபாரத்தில் எவ்வளவு பெரிய தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை உடைத்தெறிந்து வேகமாக முன்னேறிச்செல்ல முடியும் என்கின்றார் Jack Ma.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply