உலகில் அதிகம் பணம்படைத்த Jeff Bezos சொல்லும் வெற்றிக்கான 10 அறிவுரைகள் – Sudar FM

உலகில் அதிகம் பணம்படைத்த Jeff Bezos சொல்லும் வெற்றிக்கான 10 அறிவுரைகள்

இந்த செய்தியைப் பகிர்க

Jeff Bezos, ஒரு மிகப்பெரிய கம்பனியில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் 1994 இல் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டு தனி ஒருவராக தனது வீட்டின் Garage இனுள் உலகையே இன்று ஆண்டு கொண்டிருக்கும் Amazon நிறுவனத்தை ஆரம்பித்தார்.

தனது வெற்றிக்குக் காரணமாக Bezos கூறும் 10 விதிகளை நாம் இங்கு பார்க்கலாம்..

1. சவால்களை தைரியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கவேண்டுமாயின் அது தொடர்ந்து பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் விடயங்கள் வெற்றியடையலாம் அல்லது தோல்வியடையலாம். என்ன நடந்தாலும் தோல்வியைக் கண்டு தயங்காது தொடந்து புதிய விடயங்களை முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் என்கிறார் Bezos.

2. மிகப்பெரிய விடயங்கள் சிறிதாகவே ஆரம்பிக்கப்படுகின்றன.

இன்று உலகெங்கும் பரந்துள்ள Amazon நிறுவனம் ஒரு சாதாரண Garage இல் ஆரம்பிக்கப்பட்டதே. உங்கள் நிறுவனத்தையும் சிறிய அளவில் ஆரம்பித்து படிப்படியாக வளர்த்துக்கொள்ளவேண்டும்.

வெற்றிக்கு குறுக்குவழி கிடையாது நீங்கள் படிப்படியாக வளர்ந்துதான் உச்சத்தை அடையமுடியும் என்கிறார் Bezos.

3. உங்கள் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நன்மதிப்பைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள்.

ஒரு நிறுவனம் எவ்வளவு நன்மதிப்பை மக்களிடம் சம்பாதிக்கின்றதோ அவ்வளவுக்கு அதானால் பணத்தினை சம்பாதிக்க முடியும்.

மேலும் நன்மதிப்பைச் சம்பாதிப்பது மிக கடினமான விடயம், ஆனால் ஒரு சிறிய தவறின் மூலமும் உங்கள் நன்மதிப்பை நீங்கள் இழக்கலாம்.

4. செய்யவேண்டியதைச் செய்துகொள்ளுங்கள்

உங்கள் வணிகத்தில் ஒரு வேலையைக் கட்டாயம் செய்துதான் ஆகவேண்டுமானால், எப்பாடுபட்டாவது அதனைச் செய்துமுடியுங்கள், உங்களால் அதனைச் செய்யமுடியாமல் போனால் அதனை செய்யக்கூடியவர்களை நாடி செய்து முடியுங்கள்.

5. உங்கள் வீட்டிற்கும், வணிகத்திற்கும் இடையில் ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்திச் செல்லலாம், அதேபோல் உங்கள் வேலையை நீங்கள் திருப்தியுடன் செய்தால் வீட்டில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

இந்த இரண்டு விடயங்களும் ஒன்றை ஒன்று மீறாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார் Bezos.

6. உங்களது Idea வினை நடைமுறைப்படுத்துங்கள்.

உங்களுக்கு ஒரு Idea இலகுவாகத் தோன்றலாம். மிகப்பெரிய Idea க்களை மனதில் வைத்திருப்பது உண்மையிலேயே எந்த பலனையும் தராது.உங்கள் Idea க்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதே வெற்றியைப் பெற்றுத்தரும். கடின உழைப்பால் மட்டுமே இதனைச் செய்யமுடியும்.

7. உங்களுக்கென முன்மாதியானவர்களை வைத்திருங்கள் (Role Model)

தனது மிகப்பெரிய Role Model ஆக தனது தாத்தாவைக் குறிப்பிடுகின்றார் Bezos. தாத்தா பாட்டியிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளன. அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவுசெய்வதன்மூலமே அவற்றை நாம் கற்றுக்கொள்ள முடியும்.

மேலும் எடிசன், டிஸ்னி போன்றவர்களையும் தான் Role Model ஆகப் பின்பற்றுவதாக கூறுகின்றார் Bezos

8. உங்கள் மனதிற்கு விருப்பமானதையே செய்யுங்கள்

நீங்கள் விருபுவதை வணிகமாக செய்யும்போதே மிகுந்த ஈடுபாட்டுடன் அதனை செய்வீர்கள். மிகுந்த ஈடுபாட்டுடன் உங்கள் நிறுவனத்தை நடத்தினால் மட்டுமே அதனைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லமுடியும் என்கிறார் Bezos.

9. முடிந்தவரை குழுவாக செயற்படுங்கள்

எவராலும் தனியாக ஒருவிடயத்தை முழுமையாக சாதித்துவிட முடியாது. உங்களிடமுள்ள குறைகளை நிவர்த்திசெய்பவர்களை இணைத்து ஒரு குழுவினை உருவாக்கி, நிறுவனத்தின் இலக்கினை நேக்கி உங்கள் குழுவினை சரியாக வழிநடத்தினால் வெற்றி உறுதி என்கிறார் Bezos.

10. நீண்டகாலத்தை முன்னிறுத்தி சிந்தியுங்கள்.

நீண்டகால திட்டங்களை வகுப்பதே உங்கள் நிறுவனத்தைத் தொடர்ந்தும் வெற்றிப்பாதையில் வைத்திருக்கும்.

உதாரணமாக 60 வயதில் நீங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் உங்கள் நிறுவனம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை சிந்தித்து அதற்கு ஏற்றால்போல் செயற்பட வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்கின்றார் Bezos.

(மேலே சொன்ன 10 விடய்களும் Bezos இன் தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே. இவற்றில் உங்களுக்குப் பொருத்தமானதை எடுத்துக்கொண்டு மற்றயதைப் புறக்கணித்துவிடலாம்)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply