பிரபல வெற்றியாளர்கள் தவிர்க்கும் 4 பழக்கங்கள் – Sudar FM

பிரபல வெற்றியாளர்கள் தவிர்க்கும் 4 பழக்கங்கள்

இந்த செய்தியைப் பகிர்க

அனைத்து வெற்றியாளர்களுக்கும் இடையிலிருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை எதுவென்று தெரியுமா? ஒருபோதும் அவர்கள் தங்கள் நேரத்தை பயனில்லாத விடயங்களில் செலவிடமாட்டார்கள். நேரமே தங்கள் மிகப்பெரும் முதலீடு என்பதை அவர்கள் நன்கு உணர்வார்கள்.

நீங்களும் இந்த வெற்றியாளர்கள் வரிசையில் இணைய விரும்பினால், அவர்கள் தவிர்க்கும் இந்த 4 பழக்கங்களை நீங்களும் தவிர்க்க முயற்சிசெய்யுங்கள்.

1. காழ்ப்புணர்ச்சி மற்றும் மனஸ்தாபம்

21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழிலதிபராக போற்றப்படும் Elone Musk கூறுவது,

யாரின் மனதில் காழ்ப்புணர்ச்சி தோன்றுகின்றதோ, அவரின் வாழ்க்கை குறுகிவிடும்.

உங்களை அவமானப்படுத்திய ஒருவரை உங்களால் எளிதில் மறக்கமுடியாது. அதுவே இயற்கை. இருப்பினும் அவரின்மேல் உங்களிற்கு மனஸ்தாபம் அல்லது காழ்ப்புணர்ச்சி தோன்றும்போது அதை அந்த இடத்திலேயே புதைத்துவிட முயற்சிக்கவேண்டும். ஏனெனில் இவ்வாறாக எதிர்மறை எண்ணங்களை உங்களினுள் அனுமதித்தால் அது உங்கள் மனதைத் தொடர்ந்து குடைய ஆரம்பிக்கும், உங்கள் சக்தியை உறுஞ்சிக்கொள்ளும். இதனால் உங்கள் கவனம் “வாழ்வின் வெற்றி” என்பதிலிருந்து “பழிவாங்கவேண்டும்” என்ற பகுதிக்கு மாறிவிடும்.

பலவீனமானவர்கள் பழிவாங்குவார்கள், பலமானவர்கள் மன்னித்துவிடுவார்கள், மேதாபிகள் புறக்கணித்துவிடுவார்கள். – Albert Einstein

2. எப்போதும் சிறிய அளவில் சிந்தித்தல்.

எப்போதும் சிறிய வட்டத்திற்குள் சிந்திப்பது வெற்றியாளர்கள் அதிகமாக வெறுக்கும் ஒன்று.

உங்கள் எல்லையைத் தாண்டி சிந்தியுங்கள். எப்போதும் உங்கள் சிந்தனையில் புதியவற்றை சேருங்கள் என்கின்றார் Steve Jobs.

“எப்போதும் எதார்த்தமாக சிந்திக்கவேண்டும்” என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் வெற்றியாளர்களின் வரலாற்றை நீங்கள் கவனிக்கும்போது அவர்களின் சிந்தனை யதார்த்தத்திற்கு அப்பாலே இருந்துள்ளது. கணணியை ஒரு ஆய்வுப்பொருளாக மட்டுமே பாவித்துக்கொண்டிருந்த காலத்தில் Steve Jobs மட்டுமே, “ஏன் இதன் மூலம் சாதாரண மனிதனும் பயனடைய முடியாது?” என சிந்தித்தார், அந்த சிந்தனையே இன்று கணணியை நமது வாழ்க்கையின் அங்கமாக மாற்றியது.

3. மற்றவர்களைக் குறைகூறிக்கொண்டிருப்பது.

தங்கள் வாழ்க்கைக்கு தாங்களே பொறுப்பு என்பதே வெற்றியாளர்களின் நம்பிக்கை. வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் அது தங்களது முயற்சியின் பலன் மட்டுமே என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். இன்னொருவரது செயல்கள் என்றும் தங்களது வாழ்க்கையை மாற்றமுடியாது என நம்பினார்கள். அதனால் தங்கள் தவறுகளுக்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். அந்தப் பொறுப்பே அவர்களை மேலும் கடினமாக உழைக்கவைத்து வெற்றியடையவைக்கின்றது.

4. தங்கள் பாதுகாப்பு வட்டத்திற்குள்ளேயே இருப்பது.

எப்போதும் பாதுகாப்பான பகுதிக்குள்ளேயே வாழ்வது வெற்றியாளர்கள் தவிர்க்கும் பிரதான விடயம். எதைச் செய்வது பாதுகாப்பு என்பதைத் தாண்டி எதைச்செய்தால் நாம் எதிர்பார்த்த வாழ்க்கையை அடையமுடியும் என்பதையே வெற்றியாளர்கள் சிந்திப்பார்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள், தோல்வியைக் கண்டு என்றும் பின்வாங்கமாட்டார்கள்.

இந்த பழக்கமே புதிய பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கின்றது. அக் கண்டுபிடிப்புக்களே அவர்களை செல்வந்தராக்குகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply