Will Smith கூறும் வெற்றிக்கான டாப் 8 அறிவுரைகள் – Sudar FM

Will Smith கூறும் வெற்றிக்கான டாப் 8 அறிவுரைகள்

இந்த செய்தியைப் பகிர்க

ஹாலிவூட் பிரபலங்களில் மற்ற நடிகர்களைவிட அதிகமான வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் Will Smith. கடின உழைப்பிற்கு பேர்போனவர். சினிமா துறையில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டு வெற்றிகண்டவர். மேலும் தலை சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர்.

இங்கு நாம், வாழ்வின் வெற்றிக்கு Will Smith கூறிய கருத்துக்களில் மிக முக்கியமான 8 கருத்துக்களைப் பார்க்கலாம்.

1. வெற்றியின் முதல்படி உங்களால் முடியும் என்பதை மனமாற நம்புவது.

2. மகத்துவம் என்பது ஒரு சிலரால் மட்டுமே பெறக்கூடியதோ அல்லது அதிசயமான ஒன்றோ அல்ல, மாறாக அது நம் அனைவரினுள்ளும் புதைந்துள்ளது. நாம்தான் அதனை உணர்வதில்லை.

3. தினமும் காலை எழும்போது இன்றையதினம் நேற்றைய தினத்தைவிட சிறப்பானதாக அமையும் என்பதை நான் உறுதியாக என்னுள் சொல்லிக்கொள்வேன். அதுபோலவே அந்த நாள் அமையும் .

4. பணமும் வெற்றியும் யாரையும் மாற்றப்போவதில்லை. மாறாக அவை ஒருவரினுள் மறைந்திருக்கும் இயல்புகளை விஸ்தரித்துக் காட்டும்.

5. எப்போதும் யதார்த்தமாகச் சிந்திப்பவன் நடுநிலையான வாழ்க்கையையே பெறுவான். யாரிற்கும் கிடைக்காத வெற்றி வேண்டுமெனில் யாரும் சிந்திக்காததுபோல சிந்தியுங்கள்.

6. உங்களுக்குத் தேவையானதைப் பெற போராடவில்லை எனில், அவை கிடைக்காதபோது வருத்தமடையாதீர்கள்.

7. நீங்கள் என்னுடைய கஷ்ட்ட காலத்தில் என்னுடன் இல்லையெனில், என்றும் எனது வெற்றியில் பங்கெடுக்க நினைக்காதீர்கள்.

8. நீங்கள் வாழ்வதால் இன்னொருவரது வாழ்க்கை சிறப்படையவில்லை எனில், உங்களது வாழ்க்கையை வீணடிக்கின்றீ ர்கள் என்று பொருள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply