உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் Nick Vujicic இன் வெற்றிக்கான டாப் 8 அறிவுரைகள். – Sudar FM

உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் Nick Vujicic இன் வெற்றிக்கான டாப் 8 அறிவுரைகள்.

இந்த செய்தியைப் பகிர்க

Nick Vujicic பிறக்கும்போதே இரு கைகளும், இரு கால்களும் இல்லாமல் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே பல்வேறு கேலி கிண்டல்களை எதிர்கொண்டு வாழ்ந்தவர். தற்கொலை முயற்சியில் கோமா நிலைக்குச் சென்று திரும்பியவர். இன்று உலகின் தலைசிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர். பல்வேறு உலகநாடுகளில் பலகோடி மக்களிற்கு தன்னம்பிக்கை சொல்லிக்கொடுப்பவர்.

வாழ்வின் வெற்றிக்கு Nick Vujicic கூறும் டாப் 8 அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்.

1. உங்கள் வாழ்வில் எந்த அதிசயமும் நடக்கவில்லை எனில், இன்னொருவரது வாழ்வின் அதிசயமாக நீங்கள் மாறுங்கள்.

2. “நீங்கள் எவ்விதத்திலும் சிறந்தவரல்ல, உங்களால் எதுவும் முடியாது” இவை இரண்டுமே உங்கள் வாழ்வில் நீங்கள் கேட்கும் மிகப்பெரும் பொய்கள்.

3. இறந்தகால வலிகளில் உங்கள் வாழ்க்கையைச் சிக்கவைக்காதீர்கள். அது உங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இல்லாமல் செய்துவிடும்.

4. முயற்சிசெய்யுங்கள். முயற்சி வாழ்வின் ஒரு பகுதியல்ல. முயற்சியே வாழ்க்கை. பயத்திற்கும் கனவிற்கு இடையிலேயே உங்கள் வாழ்க்கை இருக்கின்றது.

5. பயமே ஒருவனின் மிகப்பெரிய இயலாமை. அது பக்கவாதத்தைவிட மோசமாக அவனை முடக்கிவிடும்.

6. மாற்றங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் வாழ்க்கை எப்போதும் நாம் விரும்பும்படி அமையாது. சிலவேளை நம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.

7. உங்கள் குறைகளைப் பயன்படுத்தி வாழாதீர்கள். மாறாக திறமைகளைப் பயன்படுத்தி வாழுங்கள்.

8. எனது நம்பிக்கையை இழக்காதவரை நான் ஊனமுற்றவனாகமாட்டேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply