ஆஸ்கார் நாயகன் AR Rahman கூறும் வெற்றிக்கான டாப் 8 அறிவுரைகள் – Sudar FM

ஆஸ்கார் நாயகன் AR Rahman கூறும் வெற்றிக்கான டாப் 8 அறிவுரைகள்

இந்த செய்தியைப் பகிர்க

AR Rahman – ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்தவர். தனது கடின உழைப்பினால் இன்று உலகப்புகழ்பெற்ற இசைக்கலைஞ்சர்.

உலக அரங்கில் தமிழரிற்குப் பெருமை சேர்த்தவர். வெற்றி குறித்து AR Rahman கூறும் 8 அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்.

1. வாழ்வின் மிகச்சிறந்த வெற்றி, மிகப்பெரும் கஷ்ட்டத்தின் பின்பே கிடைக்கின்றது.

2. என் வாழ்வு முழுவதும் எனக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன. அன்பு மற்றும் வெறுப்பு. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் இங்கு நிற்கின்றேன்.

3. நேர்மையானவராக இருங்கள். உங்கள் உள்ளுணர்வுகளை செவிமடுங்கள். வெற்றி உங்களைப் பின்தொடர்ந்துவரும்.

4. ஆர்வம் இல்லாத வாழ்க்கை வீணானது. ஆர்வம் என்பது, கனவை அடையவேண்டும் என்ற வெறி.

5. ஒரு வேலையை நீங்கள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், வெற்றிக்கான பசியுடனும் செய்யும்போது அதில் வெற்றி முடிவாகிவிட்டது.

6. நடந்தவற்றை எண்ணி வருந்துவது என்றும் வேலைக்காகாது. அதற்கு நேரமும் கிடையாது.

7. வெற்றி, தோல்வி இரண்டுமே கடவுளின் அருட்கோடை என்பதே எனது நம்பிக்கை.

8. உங்களில் குடிகொண்டிருக்கும் வலிகளே உங்கள் வாழ்க்கைக்கு ஒரு மெல்லிசையை வழங்குகின்றன.

“உங்கள் மகனை கோடம்பாக்கம் வீதிகளில் பிச்சை எடுக்க வையுங்கள் அதற்கு மட்டுமே இவன் தகுதியானவன்” – இவை ரஹ்மானின் தாயிடம் அவரது ஆசிரியர் கூறிய வார்த்தைகள். உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதே முக்கியனானது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply