உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வெற்றிக்கான அறிவுரைகள் – Sudar FM

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வெற்றிக்கான அறிவுரைகள்

இந்த செய்தியைப் பகிர்க

Albert Einstein 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகப் பார்க்கப்படுபவர். மேலும் இதுவரை காலம் வாழ்ந்த விஞ்ஞானிகளுள் அதிகம் பிரபல்யம் பெற்றவரும் இவரே. பிறக்கும்போதே ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர். மனநிலை சரியில்லாத குழந்தையாக வளர்க்கப்பட்டவர். Einstein பாடசாலையில் மிகவும் நடுநிலை மாணவன். பேச்சாற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர். நவீன பௌதீகவியலில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர். கணிதம் மற்றும் பௌதீகவியலில் இவரை மிஞ்சும் அளவிற்கு இன்னொருவர் இதுவரை காலம் பிறந்ததில்லை.

இவரின் அறிவுத்திறன் கண்டு வியந்துபோன சக விஞ்ஞானிகள், இவர் இறந்தபின்னரும் இவரின் மூளையை ஆராய்ச்சி செய்வதற்காக தனியே எடுத்து இன்றுவரை பாதுகாத்துவருகின்றனர். இவ்வாறு தன்னிகரில்லாத மேதையாக வாழ்ந்த Einstein கூறும் வெற்றிக்கான அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்.

1. வெற்றிபெற உங்கள் அறிவைவிட கற்பனை சக்தி மிக முக்கியமானது. ஏனெனில் அறிவிற்கு எல்லை உண்டு ஆனால் கற்பனைக்கு எல்லை கிடையாது.

2. சிறந்த சிந்தனை கொண்ட மனிதர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியுள்ளவர்களால் தாக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

3. ஒவ்வொரு மனிதனும் மேதையே. ஆனால் ஒரு மீன் மரத்தில் ஏறுவதுதான் தன் திறமை என நம்பினால், அதன் வாழ்நாள் முழுக்க அது தன்னை ஒரு முட்டாள் என நம்பியே வாழும்.

4. பலவீனமானவன் பழிவாங்குகின்றான். பலமானவன் மன்னித்துவிடுகின்றான், ஆனால் மேதைகள் புறக்கணித்துவிடுகின்றனர்.

5. மதங்கள், கலைகள், விஞ்ஞானம் இவை மூன்றும் ஒரே மரத்தின் மூன்று கிளைகள்.

6. கஷ்ட்டங்களிற்கு நடுவிலேயே வாய்ப்புக்கள் பிறக்கின்றன.

7. நீங்கள் செய்ய நினைப்பதை செய்யாமல் விடவேண்டாம். ஏனெனில் பல ஆய்வுகள் செய்து முடிவெடுப்பவனைவிட, தன் மனதில் பெரும் கனவைச் சுமந்து முயற்சிசெய்பவன் வெற்றிபெறுகின்றான்.

8. என்னிடம் எந்த சிறப்பியல்புகளும் இல்லை, என்னிடம் இருப்பதெல்லாம் அளவுகடந்த ஆர்வம் மட்டுமே.

9. ஒரு கப்பல் கரையில் இருக்கும்போது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அது அதற்காக உருவாக்கப்படவில்லை.

10. ஒரு முட்டாளின் இதயத்திலேயே கோபம் குடிகொண்டிருக்கும்.

11. வாழ்க்கை சைக்கிள் ஓட்டுவதைப் போன்றது. முன்னோக்கி நகர்ந்துகொண்டிருப்பவனால் மட்டுமே கீழே விழாமலிருக்கமுடியும்.

12. உங்கள் வாழ்க்கையை வாழ இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அனைத்தையும் கடவுளின் அருளாகப் பார்ப்பது. மற்றயது அவ்வாறு பார்க்காமல் வாழ்வது.

13. என்று நீங்கள் கற்றுக்கொள்வதை நிறுத்துகின்றீர்களோ, அன்று சிறிது சிறிதாக இறக்க ஆரம்பித்துவிடுகின்றீர்கள்.

14. இன்றைய தொழில்நுட்பம் நமது மனிதநேயத்தை கீழே தள்ளிவிட்டது. இதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

15. யார் ஒருவேலையை தனது முழு பலத்தையும் கொடுத்து அர்ப்பணிப்புடன் செய்கின்றாரோ, அவர் அதில் தலை சிறந்தவராகிவிடுகின்றார்.

16. எனக்கு உதவ மறுத்தவர்களிற்கு நன்றி கூறுகின்றேன். ஏனெனில், அதன் பின்னரே நான் சுயமாக அனைத்தையும் செய்துமுடிக்கக் கற்றுக்கொண்டேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply