இன்றைய நகைச்சுவை (21-06-2019) – Sudar FM

இன்றைய நகைச்சுவை (21-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

தலைவர்னா

ஏன்டா எல்லப்பா, என்னடா புதுசா ஆரம்பிச்ச உங்க கட்சியில உள்ள முக்கிய புள்ளிகள் எல்லாம் பெரிய தலை ஆசாமிகளா இருக்கிறாங்க.
@@@@@
அட கோலப்பா, தலை பெருசா இருக்கிறவங்களுக்குத்தான் மூளை அதிகமாக இருக்கும். அவங்க சிந்தனைத் திறமையும் அதிகமாக இருக்கும்.
@@@@@
நீ சொல்லறது உண்மையா இருக்கலாம். சரி உங்க கட்சில கட்சித் தலைவரை எப்பிடீடா தேர்ந்தெடுப்பீங்க?
@@@@@@
பெரிய தலையும் கொழுத்த மூஞ்சியுமா உள்ளவங்கதான் எங்க கட்சில செயற்குழு உறுப்பினர்களா இருக்கு முடியும். அவுங்கள்ல யாரோட தலை கொழுத்த பழுத்த முகத்தோட ரொம்ப பெருசா இருக்குதோ அவர்தான் எங்க கட்சியின் தலைவர் ஆகமுடியும். அவரை நாங்க ‘பெருந்தலைவர்’ன்னு சொல்லுவோம்.
@@@@
ரொம்ப புதுமையான கட்சிடா உங்க கட்சி. தலைவர்னா இப்பிடித்தான்டா இருக்கணும். ரொம்ப நன்றிடா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply