இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (21-06-2019) – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (21-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

சூன் 21 (June 21) கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1307 – குலுக் கான் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் முடி சூடினார்.
1529 – பிரெஞ்சுப் படையினர் வடக்கு இத்தாலியில் இருந்து எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர்.
1621 – முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.
1734 – மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார்.
1749 – ஹாலிஃபாக்ஸ் அமைக்கப்பட்டது.
1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியும் அவரது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.
1898 – அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து குவாமைக் கைப்பற்றியது.
1900 – பேரரசி டோவாகர் சிக்சியின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, சப்பான் ஆகியவை மீது சீனா போரை அறிவித்தது.
1919 – கனடா, வினிப்பெக் நகரில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
1919 – இசுக்கொட்லாந்து, ஓர்க்னியில் செருமானியக் கப்பல் ஒன்றை அதன் கப்டன் லூர்விக் வொன் ரியூட்டர் வேண்டுமென்றே மூழ்கடித்ததில் ஒன்பது மாலுமிகள் உயிரிழந்தனர். இதுவே முதலாம் உலகப் போரின் கடைசி உயிரிழப்புகளாகும்.
1929 – மெக்சிக்கோவில் கிறிஸ்தேரோ போர் முடிவுக்கு வந்தது.
1930 – பிரான்சில் இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
1940 – வடமேற்குப் பெருவழி ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் பிரிட்டிசு கொலம்பியா, வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீது நடத்திய முற்றுகை தோல்வியடைந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கி ஒன்று அமெரிக்கா, ஓரிகன் மாநிலத்தில் கொலம்பியா ஆற்றில் இருந்து குண்டுகளை ஏவியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் இத்தாலிய, செருமனியப் படையினரிடம் வீழ்ந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.
1963 – கருதினால் கியோவன்னி பத்தீசுத்தா மொண்டினி ஆறாம் பவுல் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1964 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில், குடிசார் இயக்க உரிமைத் தொழிலாளர்கள் மூவர் கு கிளக்சு கிளான் இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
2000 – ஐக்கிய இராச்சியத்தில் நிறைவேற்றப்பட்ட தற்பால்சேர்க்கையை ‘ஊக்குவிப்பது’ சட்டவிரோதமானது என்ற சட்டமூலம் இசுக்கொட்லாந்தில் 99:17 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
2004 – முதலாவது தனியார் விண்ணூர்தி ஸ்பேஸ்சிப்வன் மனித விண்வெளிப் பறப்பை மேற்கொண்டது.
2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு துணைக்கோள்களுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.
2009 – கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.
2012 – 200 ஆப்கானிய ஏதிலிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்திற்கும் கிறிஸ்துமசு தீவுக்கும் இடையில் மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காணாமல் போயினர்.

பிறப்புகள்

1863 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (இ. 1932)
1870 – கிளாரா இம்மெர்வார், போலந்து-செருமானிய வேதியியலாளர் (இ. 1915)
1880 – ஆர்னல்டு கெசெல், அமெரிக்க மருத்துவர், உளவியலாளர் (இ. 1961)
1905 – இழான் பவுல் சார்த்ர, பிரான்சிய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1980)
1916 – எர்பெர்ட் ஃபிரீடுமேன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2000)
1925 – வே. ஆனைமுத்து, பகுத்தறிவாளர்
1926 – கான்ராடு ஹால், பிரான்சிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 2003)
1927 – பீ. ஜீ. வர்கீஸ், இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (இ. 2014)
1947 – சீரீன் இபாதி, நோபல் பரிசு பெற்ற ஈரானிய நீதிபதி, செயற்பாட்டாளர்
1953 – பெனசீர் பூட்டோ, பாக்கித்தானின் 11வது பிரதமர் (இ. 2007)
1955 – மிச்செல் பிளாட்டினி, பிரான்சிய துடுப்பாட்ட வீரர்
1961 – ஜோக்கோ விடோடோ, இந்தோனேசியாவின் 7வது அரசுத்தலைவர்
1965 – யங் லிவே, சீன விண்வெளிவீரர்
1965 – லானா வச்சோவ்சுக்கி, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்
1967 – யிங்லக் சினாவத்ரா, தாய்லாந்தின் 28வது பிரதமர்
1979 – கிறிஸ் பிராட், அமெரிக்க நடிகர்
1982 – இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்
1982 – சிக்கில் குருசரண், தமிழக கருநாடக இசைப் பாடகர்
1983 – எட்வேர்ட் சுனோவ்டன், அமெரிக்க செயற்பாட்டாளர்

இறப்புகள்

1377 – மூன்றாம் எட்வர்டு, இங்கிலாந்தின் மன்னர் (பி. 1312)
1527 – நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர் (பி. 1469)
1591 – அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (பி. 1568)
1631 – யோன் சிமித், ஆங்கிலேயத் தேடலறிஞர் (பி. 1580)
1857 – லூயி ஜாக் தெனார், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1777)
1874 – ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம், சுவீடன் இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1814)
1940 – கேசவ பலிராம் ஹெட்கேவர், இந்துத்துவவாதி (பி. 1889)
1954 – கிடியொன் சண்டுபெக்கு, பல்லிணைவுப் பட்டிகையை உருவாக்கிய சுவீடன்-அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1880)
1957 – ஜொகன்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1874)
1970 – சுகர்ணோ, இந்தோனேசியாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1901)
1994 – வில்லியம் வில்சன் மார்கன், அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1906)
2001 – கே. வி. மகாதேவன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1918)

சிறப்பு நாள்

தந்தையர் தினம் (எகிப்து, லெபனான், ஜோர்தான், சிரியா, உகாண்டா, பாக்கித்தான், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா)
பன்னாட்டு யோகா நாள்
உலக மனிதநேய நாள்
உலக நீராய்வியல் நாள்
தேசிய பழங்குடிகள் நாள் (கனடா)

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply