உங்கள் வெற்றியைத் தடுக்கும் 3 பழக்கங்கள் – பிரபல கேடீஸ்வரர்கள் கூறுவது என்ன? – Sudar FM

உங்கள் வெற்றியைத் தடுக்கும் 3 பழக்கங்கள் – பிரபல கேடீஸ்வரர்கள் கூறுவது என்ன?

இந்த செய்தியைப் பகிர்க

மனிதனாய் பிறந்த அனைவரிற்கும் பல்வேறு கெட்ட பழக்கங்கள் இருப்பது இயல்பே. ஆனால் பல வெற்றியாளர்களின் கருத்துப்படி நம்மிடம் இருக்கும் சில பழக்கங்கள் வெற்றியிலிருந்து நம்மை தொடர்ந்து தடுத்துவைக்கின்றன. Bill Gates, Elon Musk போன்றவர்கள் சுட்டிக்காட்டும் அவ்வாறான சில பழக்கங்களை இங்கு பார்க்கலாம்.

பிற்போடுவதை நிறுத்துங்கள்

நமக்குப் பிடிக்காத ஒருவேலையைச் செய்யும்போது அதை முடிந்தவரை பிற்போடப்பார்ப்பதே நமது இயல்பு. குறித்த வேலையை இறுதிக்கட்டத்தில் செய்து முடிப்போம் அல்லது குறித்த நேரத்தில் செய்யாமல் விட்டுவிடுவோம். ஆனால் இந்தப் பழக்கத்தை நாம் தொடர்ந்து பின்பற்றும்போது இது நம்மை வெற்றியிலிருந்து வெகு தூரமாக்குகின்றது என்கின்றார் புகழ் பெற்ற கோடீஸ்வரர் Bill Gates.

தனது கல்லூரி காலங்களில் படிப்பு சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இறுதி கட்டத்திலேயே செய்பவராக இருந்தாராம் Bill Gates. பின்னர் கல்லூரியிலிருந்து வெளியேறி Microsoft நிறுவனத்தை ஆரம்பித்தபோதும் இந்தப் பழக்கம் அவரை விடாது பின்தொடர்ந்தது. இதனால் தனக்கு வரும் Software Project களை உரிய நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் தடுமாறினார். இந்த பழக்கத்தை தன் வாழ்வில் இருந்து விரட்டிய பின்னரே தனது வணிகம் மிக வேகமாக வளர ஆரம்பித்ததாக கூறுகின்றார் Bill Gates

அதிகமாக காபி அருந்துதல்.

இது கேட்பதற்கு முட்டாள் தனமாக இருந்தாலும், மிக அதிகமாக காபி அருந்துவது மன அழுத்தத்தையும், பதற்ற நிலையையும் தோற்றுவிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 21 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தொழிலதிபரான Elon Musk கூறுவதை கொஞ்சம் பார்க்கலாம்

தான், வாரம் 120 மணித்தியாலங்களிற்கு மேல் வேலை செய்வதாக கூறும் Elon Musk. இதனால் அதிகமாக தூக்கம் வருவதைத் தடுக்கவும் பசியைப் போக்கவும் ஆரம்ப காலங்களில் தினமும் பல கப் காபி அருந்தியதாக கூறுகின்றார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தான் காபி அடிமையாகவே மாறிவிட்டதாகவும், இதனால் தனது வேலைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டதாகவும் ஒரு ஜேர்மன் பத்திரிகைக்கு இவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக தற்போது Elon Musk காபி அருந்துவதைக் குறைத்துவிட்டு அதற்குப் பதிலாக தண்ணீர் அருந்த ஆரம்பித்துவிட்டதாக குறிப்புடுகின்றார்.

கடுமையான உரையாடல்கள்.

உங்கள் வெற்றி வெறுமனே உங்களில் மட்டும் தங்கியிருப்பதில்லை. உங்களைச் சுற்றியுள்ள பலரின் உதவி மற்றும் உழைப்பின் மூலமே அதனைப் பெறமுடியும். உங்களுடன் வேலை செய்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் உங்களிற்குத் தேவை.

நீங்கள் உங்களுடன் இருப்பவர்களுடன் கடுமையாக நடந்துகொண்டால் அது அவர்களிற்கு உங்கள் மீது வெறுப்பை உண்டாக்குவது மட்டுமல்லாமல் உங்களின் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும் என்கின்றார் புகழ் பெற்ற முதலீட்டாளர் Mark Cuban.

தனது ஆரம்ப காலங்களில் தன்னுடன் இருந்தவர்களை அதிகமாகத் திட்டும் பழக்கம் தனக்கு இருந்ததாக கூறுகின்றார் Cuban. இதனால் பல நண்பர்கள் மற்றும் வேலையாளர்களைத் தான் இழந்துவிட்டதாக குறிப்பிடுகின்றார். இவ்வாறான நிகழ்வுகளால் தனது நிறுவனத்தின் செயல் திறன் குறைந்ததாகவும், அதன் பின்னரே மற்றவர்களுடன் கடுமையாக நடந்து கொள்வதால் நாம் மிகப்பெரும் நஷ்ட்டத்தையே பெற்றுக்கொள்ள முடியும் என தான் உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

மற்றவர்களின் கருத்துக்களை செவிமடுப்பதும், அவர்களின் நிலைமைகளை உணர்ந்து செயற்படுவதும் எப்போதும் வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்கிறார் Cuban.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply