நீங்கள் உண்மையிலேயே வெற்றியடைவீர்களா? இல்லையா? என்பதைக் கண்டறிய வெற்றியாளர்கள் கூறும் 4 யுக்திகள்.. – Sudar FM

நீங்கள் உண்மையிலேயே வெற்றியடைவீர்களா? இல்லையா? என்பதைக் கண்டறிய வெற்றியாளர்கள் கூறும் 4 யுக்திகள்..

இந்த செய்தியைப் பகிர்க

வாழ்வின் பல தருணங்களில் உங்களது கனவுகளை அடைவது ஒரு எட்டாக்கனியாகவே தோன்றலாம்.

வெற்றியைவிட அதிக தோல்விகளைக் காண்பதும் , ஊக்கத்தைவிட அதிக கேலிகளைக் காண்பதும் நமது மனதில் வெற்றியை ஒரு எட்டாக்கனியாகவே பிரதிபலிக்கின்றன.

இவ்வாறான சூழலில், நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் பாதை சரியானதுதானா எனக் கண்டறிவதற்காக பிரபல வெற்றியாளர்கள் கூறும் சில யுக்திகள் உங்களுக்காக ..

1. அடுத்து என்ன?

அடுத்த கட்டத்திற்கு நகர்வது உங்கள் மனதில் பெரும் இலக்காகப் பதிந்திருக்கும். அதற்காக நீங்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தொடர்ந்து கற்றுக்கொள்வீர்கள். அனுபவத்தைச் சேமிப்பீர்கள். வெற்றியடைய எதுவேண்டும் என்பதை ஆய்வுசெய்து அதைத் தைரியமாக முயற்சிப்பீர்கள்.

2. உங்கள் தனித்துவ பலத்தில் வாழ்வீர்கள்.

அடுத்தவர்களிடமில்லாத ஒரு தனித்துவச் சிறப்பு நம் அனைவரிடமும் இருக்கும். அவ்வாறாக உங்களிடமுள்ள தனித்திறமைகளை நீங்கள் அடையாளம் கண்டிருப்பீர்கள். அவற்றை உங்கள் வெற்றிக்காகவும் பயன்படுத்துவீர்கள்.

” யார் தனது தனித்திறமைகளைப் பயன்படுத்தி வெற்றிக்காக உழைக்கின்றாரோ அவர் அந்த வெற்றியை அடுத்தவர்களைவிட வேகமாக அடைந்துகொள்கின்றார். மேலும் அவர் தனது வேலையை சலிப்பின்றி மனநிறைவுடன் செய்துமுடிக்கின்றார் ” என்கின்றார் Eric Barker.

3. மன அழுத்தத்தைக் கையாள்வீர்கள்.

பலர் முயற்சிசெய்கின்றார்கள். அவர்கள் எதிர்பார்த்த விளைவுகள் உடன் கிடைக்காதபோது மன அழுத்தத்திற்கு ஆளாகி அந்த முயற்சிகளைக் கைவிட்டுவிடுகின்றார்கள். ஆனால் வெற்றியாளர்களின் செயல் மாறுபட்டது.

அவர்களும் தோல்வியடைகின்றார்கள். ஆனால் அதை எண்ணி வருந்துவதில்லை. அவர்கள் தங்கள் தோல்விக்கான காரணத்தை கண்டறிகின்றார்கள். அதைச் சரிசெய்து மீண்டும் முயற்சிக்கின்றார்கள்.

மனக்குமுறல்கள் தங்களது வெற்றியைத் தடுத்துவிட அவர்கள் என்றும் அனுமதிப்பதில்லை.

4. நானே பொறுப்பு.

என் வெற்றி எனது கையில் மட்டுமேயுள்ளது, அதற்காக நானே உழைக்கவேண்டும், என்பதில் நீங்கள் மிகத் தெளிவாக இருப்பீர்கள். அடுத்தவர்களைப் பயன்படுத்திக் கொள்வது, அவர்களின் உழைப்பை உறுஞ்சிக்கொள்வது போன்ற எந்த மனநிலையும் உங்களிடமிருக்காது.

அதுபோலவே நீங்கள் எதிர்கொள்ளும் தோல்விகளுக்குமான பொறுப்பையும் நீங்களே ஏற்றுக்கொள்வீர்கள். அடுத்தவர்களைக் குறைகூறுவது, குற்றம்பிடிப்பது போன்ற எந்த பழக்கங்களும் உங்களிடமிருக்காது..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply