பயம், பதற்றம் மற்றும் தேவையற்ற சிந்தனைகளை விரட்டுவது எவ்வாறு? – Sudar FM

பயம், பதற்றம் மற்றும் தேவையற்ற சிந்தனைகளை விரட்டுவது எவ்வாறு?

இந்த செய்தியைப் பகிர்க

வாழ்வின் ஒரு முக்கிய தருணத்திலோ, அல்லது உங்களை வெளிக்காட்டவேண்டிய சந்தர்ப்பத்திலோ நீங்கள் பதற்றமடையலாம். பயம் உங்களை ஆட்கொள்ளலாம்..

பயம் பதற்றம் என்பன அனைவருக்கும் பொதுவானதே, ஆனால் அவை எல்லைமீறும்போது நமது வாழ்க்கையிலும், வெற்றியிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன .

இவ்வாறு தேவையற்ற நேரத்தில் எழும் பதற்றத்தை விரட்டியடிக்க உளவியலாளர்கள் கூறும் இரு முக்கிய அறிவுரைகள் உங்களுக்காக..

1. தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை குறைவாக இருப்பதே நமது பதற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகின்றது. நம்மால் ஒரு வேலையை வெற்றிகரமாக செய்துமுடிக்க முடியுமா? நாம் தவறிழைத்துவிடுவோமா? வேறு எவரிடமாவது இந்த பொறுப்பை கொடுத்துவிடலாமா போன்ற சிந்தனைகள் உங்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருப்பதற்கான அடையாளமாகும்

2. அடுத்தவர்கள் குறித்த சிந்தனை..

என்னை இந்த உலகம் உற்றுநோக்குகின்றது. எனது ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு முடிவையும் பலர் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற தவறான எண்ணம் ஒரு வேலையை ஆரம்பிக்கும்போதே நம்மிடம் தோன்றி, இதில் தோல்வியடைந்தால் பலர் நம்மைக் கேலிசெய்வார்கள் என்ற பயத்தை நம்மிடம் உருவாக்கிவிடுகின்றது.

தவறிழைத்துவிடக் கூடாது என்ற அழுத்தம் நம்மிடையே உருவாகி அது பதற்றமாக உருவெடுக்கின்றது.

எனில் இந்தப் பதற்றத்தை எவ்வாறு விரட்டுவது?

மேலேயுள்ள இரண்டு விடயங்களையும் சரிசெய்தால் உங்கள் மனதில்தோன்றும் பயம், பதற்றம் இரண்டுமே விலகிவிடும். அது எவ்வாறு என்பதை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை குறைபாடு.

அனைத்தும் அறிந்தவர் இங்கு எவருமில்லை. அனைவருமே முயற்சி செய்து, தவறிழைத்து, அந்த அனுபவத்திலேயே வாழ்க்கையைக் கற்றுக்கொள்கின்றார்கள். நீங்களும் அதையே செய்யவேண்டும்.

தோல்வியடைவதோ, வாழ்வில் சறுக்குவதோ ஒரு பெரும் தவறல்ல என்பதை உணருங்கள்.

தவறிழைப்பவன் முட்டாளல்ல, தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதவனே முட்டாளாவான். இந்த எண்ணத்தை உங்கள் மனதில் பதித்துக்கொள்ளுங்கள், நிச்சயம் உங்களிடம் தன்னம்பிக்கை துளிர்விடும்.

2. அடுத்தவர்கள் குறித்த சிந்தனை..

தற்கால மனிதர்களுக்கு தங்களது வாழ்க்கையைக் கவனிப்பதற்கே நேரம் போதாமலிருக்கும்போது உங்கள் வாழ்க்கையை அவர்கள் எதற்காக உற்றுநோக்கவேண்டும்?.

உங்கள் தோல்வியை சிலர் விரும்பலாம். நீங்கள் சறுக்கி விழும்போது அவர்கள் மகிழ்ச்சியடையலாம். அதற்காக அவர்கள் தங்களது பிரச்சனைகளை மறந்துவிட்டு உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்பதில் மட்டும் கவனமாக இருப்பார்கள் என எண்ணிவிடாதீர்கள்.

உங்களைக் கேலிசெய்பவர்கள் அதை அன்றே மறந்துவிடுவார்கள். ஆனால் அவர்களின் கேலிக்குப் பயந்து நீங்கள் எடுக்கும் ஒரு தவறான முடிவு உங்கள் வாழ்க்கையின் பாதையையே மாற்றிவிடும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்..

எனவே தன்னம்பிக்கையோடு வாழுங்கள், அடுத்தவர்கள் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள், வாழ்க்கை நிச்சயம் வெற்றிகரமானதாக மாறும்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply