இன்றைய கவிதை (06-09-2019) – Sudar FM

இன்றைய கவிதை (06-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

அவள்

கவிதையடி நீ எனக்கு
நல்ல ராகமும் நீயே
தாளமாடி நான் உனக்கு
ஸ்வரங்கள் சஞ்சாரமடி
நீ எனக்கு
கொஞ்சம் ஸ்வர பேதங்கள்
காட்டுவாயா கண்ணே கல்யாணி
உன்னை சுநாத விநோதினியாய்
சாரங்காவாய் , மோஹன கல்யாணியை
உந்தன் எழிலின் தனிப்பூக்களாய்
ஒரே மரத்தில் பூத்த வினோத பூக்களாய்
என்னே உன் எழில்
எந்தன் இசைப் ப்ரியே
நீ என்றும் பாடல்
பாடலின் ராகம்
பல்லவி, அனுபல்லவி, என்றால்
என்றும் உனக்கு ‘சரணம்’ நான்

எழுதியவர் : வாசவன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply