நீங்கள் மிகக் கடுமையாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காது. நிச்சயம் கிடைக்காது. ஏன் தெரியுமா? – Sudar FM

நீங்கள் மிகக் கடுமையாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காது. நிச்சயம் கிடைக்காது. ஏன் தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

பலர் கடினமாக உழைக்கின்றார்கள். ஆனால் அவர்களால் தங்கள் இலக்கினை அடைந்துகொள்ள முடிவதில்லை. நாம் கஷ்டப்பட்டால் வெற்றியடைந்துவிடலாம் என அவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் அந்தக் கஷ்டத்தையும் சரியான வழியில் அனுபவித்தால் மட்டுமே வெற்றியைப் பெறமுடியும் என்பதே நிதர்சனம்.

நாம் இழைக்கும் சில தவறுகளே நமது கடின உழைப்பை வீணடிக்கின்றன. இந்தத் தவறுகளைச் செய்துகொண்டு நாம் எவ்வளவுதான் உழைத்தாலும், நமது இலக்கினை அடைந்துகொள்வது மிகக் கடினமாகிவிடும்.

1. நேரத்தின் பெறுமதியை உணராமல் இருப்பது.

நேரம் பணத்தைவிட மிக அதிக பெறுமதி கொண்டது என்பதை அனைத்து வெற்றியாளர்களும் அறிவார்கள் – Richard Branson

யார் நேரத்தின் பெறுமதியை அறியவில்லையோ அவர் வெற்றிபெறுவது சாத்தியமற்ற விடயம். பலர் முயற்சி செய்கின்றோம் என்ற பெயரில் தங்களுக்குப் பிரயோசனமற்ற வேலைகளில் நேரத்தை வீணடிக்கின்றார்கள். நீங்கள் ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் முன் அதற்காக உங்கள் நேரத்தை செலவு செய்வது உண்மையிலேயே பிரயோசனமானதுதானா என்பதை சிந்தித்தபின் செய்யுங்கள்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும், வெற்றி இலக்கினை நோக்கி உங்களை அழைத்துச் செல்லவேண்டும். இலக்குகளிற்குச் சம்பந்தமில்லாத விடயங்களில் கடின உழைப்பை கொடுப்பீர்களாக இருந்தால், அந்தக் கடின உழைப்பினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. எனவே சிந்தித்து செயற்படுங்கள்.

2. தங்களுக்கென வரையறைகளை வைத்திருப்பது.

என்னால் இது மட்டும்தான் முடியும். இதை மட்டுமே நான் செய்வேன் என்ற மனநிலை வெற்றியை விட்டு உங்களை வெகு தூரமாக்கிவிடும். ஒன்றை மறவாதீர்கள், நீங்கள் விரும்பிய தகுதிகளை உங்களிடம் கொண்டுவரமுடியும். உங்களால் முடியாத வேலைகளை செய்யவும் முடியும். அதற்கு நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

3. விரைவில் மனமுடைந்து போவது.

உங்கள் முயற்சியில் பல தோல்விகளைச் சந்திக்க நேரிடும். அப்போது உங்களிடம் மன தைரியம் இருக்கவேண்டும். ஒரு முயற்சி தோல்வியடைந்த கணமே, அது சரிவராது என்ற முடிவிற்கு வராதீர்கள். மனம் தளர்ந்துவிடாதீர்கள். தோல்விக்கான காரணத்தை சிந்தியுங்கள். அக்காரணங்களை சரி செய்தால் குறித்த முயற்சி வெற்றிபெறுமா என்பதை ஆராயுங்கள். அந்த முயற்சி வெற்றி பெறாது எனில் தைரியமாக அடுத்த முயற்சியை ஆரம்பியுங்கள்.

உங்கள் தோல்விகளிலிருந்து கிடைக்கும் அனுபவமே இறுதியில் மிகப்பெரும் வெற்றியைக் கொண்டுவருகின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply