உங்கள் அருகிலேயே இருந்துகொண்டு, மனவுறுதியைத் தகர்த்து, உங்களை நிரந்தர தோல்வியிலேயே வைத்திருக்கும் நச்சு மனிதர்களை இனம் காண்பது எவ்வாறு? – Sudar FM

உங்கள் அருகிலேயே இருந்துகொண்டு, மனவுறுதியைத் தகர்த்து, உங்களை நிரந்தர தோல்வியிலேயே வைத்திருக்கும் நச்சு மனிதர்களை இனம் காண்பது எவ்வாறு?

இந்த செய்தியைப் பகிர்க

மனிதர்களில் பல வகையுண்டு. அதில் ஒரு சிலர் மட்டுமே அனைவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற நல்லுள்ளம் கொண்டவர்கள். பலரிற்கு அடுத்தவர் வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால் இவை இரண்டும் தவிர்ந்த ஒரு வகையுண்டு. இவர்களே உங்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை மெது மெதுவாக நடத்துகின்றனர். இவர்களே நச்சு மனிதர்களாவர்.

நச்சு மனிதர்கள் உங்கள் வெற்றியில் பொறாமை கொள்வார்கள். உங்கள் மனவுறுதியை உடைத்து, மனதில் எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிப்பார்கள். இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு இவர்களைவிட்டு முடிந்தவரை விலகியிருப்பது நம் வெற்றிக்கு அவசியமானது. அது எவ்வாறு என்பதை இங்கு பார்க்கலாம்.

1. நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் அதிகமாக உங்கள் முயற்சியில் தலையிடுவார்கள். உங்களைத் திருத்த முற்படுவார்கள். அவர்கள் கூறுவதைக் கேட்டால் மட்டுமே உங்களிற்கு வெற்றிகிடைக்கும் என்பதுபோல நடந்துகொள்வார்கள். உங்களது மனநிலையை உணராது, அவர்கள் எண்ணுவதையே உங்கள் மீது திணிக்க முனைவார்கள்.

2. நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள்.

நச்சு மனிதர்கள் எதன்மீதும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். எதை எடுத்தாலும் அதிலுள்ள குறைகளையே பார்ப்பார்கள். தோல்வியைப் பற்றியே அதிகமாக சிந்திப்பார்கள்.

3. அதிகமாகக் குறைகூறுவார்கள்.

இவர்கள் எதற்கெடுத்தாலும் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள். தங்கள் வேலை, சூழல், வாழ்க்கை இவை அனைத்தையும் பற்றி குறைகூறுவார்கள். மற்றவர்களை இலகுவில் குற்றம் பிடித்துவிடுவார்கள். மற்றவர்களின் நிலைமை பற்றி சிந்திக்காது தான்தோன்றித் தனமாக செயற்படுவார்கள்.

4. உங்கள் சக்திகளை உறுஞ்சிக் கொள்வார்கள்.

இவர்களுடன் சில நிமிடங்கள் பேசினால் உங்களது தன்னம்பிக்கை குறைந்துவிடும். உங்கள் முயற்சியில் சந்தேகம் தோன்றிவிடும். வெற்றியின் மீதுள்ள ஆர்வம் குறைந்துவிடும். உங்களது தலை முழுக்க இவர்கள் எதிர்மறையான எண்ணங்களை நிரப்பிவிடுவார்கள்.

இந்த நான்கு இயல்புகளையும் கொண்ட மனிதர்கள் உங்களுடன் இருந்தால், அவர்களுடன் சற்று அவதானமாகவே இருங்கள். அவர்களின் கருத்துக்கள், பரிந்துரைகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply