ஒரு சாதாரண மாணவனை ஐந்து லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக்கிய 5 பழக்கங்கள்.. கூறுகின்றார் Facebook நிறுவனர் Mark Zuckerberg. – Sudar FM

ஒரு சாதாரண மாணவனை ஐந்து லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக்கிய 5 பழக்கங்கள்.. கூறுகின்றார் Facebook நிறுவனர் Mark Zuckerberg.

இந்த செய்தியைப் பகிர்க

19 வயது Mark Zuckerberg இனால் தனது கல்லூரியின் மாணவர் விடுதியில் ஆரம்பிக்கப்பட்ட Facebook நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 515 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதை ஆரம்பித்த Mark Zuckerberg இன் இன்றைய சொத்துமதிப்பு 67 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (ஐந்து லட்சம் கோடி இந்திய ரூபாய்கள்)

Facebook இனை ஆரம்பிக்கும்போது Zuckerberg இடம் 100 டாலர்கள் கூட இருக்கவில்லை. தன்னுடன் இணைந்துகொள்ளுமாறு பல நண்பர்களைக் கேட்டார். அனைவரும் நிராகரித்தனர். நால்வரைத் தவிர. அதில் அந்தக் கல்லூரியிலேயே அடிமுட்டாளாகப் பார்க்கப்பட்டவரும் ஒருவர். இவர்கள் அனைவரும் இன்று அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர்கள் பட்டியலிலுள்ளார்கள்.

தங்களது இந்த அபரிமிதமான வெற்றிக்குக் மிக முக்கிய காரணமாக Mark Zuckerberg கூறும் 5 பழக்கங்களையே நாம் இங்கு பார்க்கவிருக்கின்றோம்.

1. நேரம்.

நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் நேரத்தை எதில் செலவு செய்கின்றீர்களோ அதையே திரும்பப் பெற்றுக்கொள்வீர்கள். எனவே உங்கள் நேரத்தை, உங்கள் கனவுகளை அடையும் முயற்சியில் செலவுசெய்யுங்கள். அதுவே நீங்கள் வெற்றியடைய ஒரேவழி.

2. தவறு செய்யுங்கள்.

ஒரு முயற்சியை எந்தத் தவறுமின்றி செய்து முடிப்பது எவ்வாறு? என என்னிடம் அதிகமானவர்கள் கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் ஒரே பதில், முதலில் தவறிழைக்கக் கூடாது என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். புதிய முயற்சிகளை செய்துபாருங்கள். தவறு செய்யுங்கள். அவற்றிலிருந்து அனுபவத்தைப் பெறுங்கள். என்ன நடந்தாலும் உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்.

3. உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். வாழ்வில் அனைத்தையும் உங்களால் தனிமையில் சாதித்துவிட முடியாது, எனவே அடுத்தவர்களின் அனுபவங்கள், கருத்துக்களையும் கொஞ்சம் செவிமடுங்கள். ஆனால் இறுதி முடிவு உங்களிடமே இருக்கவேண்டும்.

4. முயற்சி.

எதைச் செய்தாலும் அதில் உங்கள் 100 சதவிகித உழைப்பைச் செலுத்துங்கள். உங்களைத் திருப்திப்படுத்தும் வேலையைச் செய்யுங்கள். அதுவே உங்களை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்லும்.

5. உங்கள் பாதை.

உங்கள் பாதையை நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள். அதில் தடையாக நிற்க யாரையும் அனுமதிக்காதீர்கள். பலர் உங்கள் முயற்சிகளிற்கு முட்டுக்கட்டைபோட முயல்வார்கள். அவர்களின் கருத்துக்களை நீங்கள் செவிமடுக்க ஆரம்பித்தால் நீங்கள் விரும்பும் வெற்றியை அடைந்துகொள்ளவே முடியாது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply