இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (18-09-2019) – Sudar FM

இன்றைய வரலாற்று நிகழ்வுகள் (18-09-2019)

இந்த செய்தியைப் பகிர்க

செப்டம்பர் 18 (September 18) கிரிகோரியன் ஆண்டின் 261 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 262 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 104 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1066 – நோர்வே மன்னர் எரால்சு ஆர்திராதா இங்கிலாந்து மீதான முற்றுகையை ஆரம்பித்தார்.
1180 – பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார்.
1679 – மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இருந்து நியூ ஆம்ப்சயர் தனியாகப் பிரிக்கப்பட்டது.
1739 – பெல்கிரேட் நகரம் உதுமானியப் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.
1759 – ஏழாண்டுப் போர்: கியூபெக் நகரை பிரித்தானியா பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது.
1810 – சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது.
1812 – மாஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெத்ரோவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.
1851 – த நியூயார்க் டைம்ஸ் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1872 – இரண்டாம் ஒஸ்கார் சுவீடன்–நோர்வேயின் மன்னராக முடி சூடினார்.
1906 – ஆங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் உயிரிழந்தனர்.
1911 – உருசியப் பிரதமர் பியோத்தர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பேரா மாளிகையில் சுடப்பட்டார்.
1919 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1922 – உலக நாடுகள் அணியில் அங்கேரி இணைந்தது.
1924 – மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
1934 – உலக நாடுகள் அணியில் சோவியத் ஒன்றியம் இணைந்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்: இக்னாசி மொஸ்சிக்கியின் தலைமையிலான போலந்து அரசு உருமேனியாவுக்கு தப்பி ஓடியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கப்பல் வாரணாசி நகரம் நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 77 குழந்தைகள் உட்படப் பல அகதிகள் உயிரிழந்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சோபிபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற இட்லர் உத்தரவிட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத் தாக்கியதில் போர்க்கைதிகள், மற்றும் அடிமைகள் உட்பட 5,600 பேர் கொல்லப்பட்டனர்.
1948 – ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை போலோ நடவடிக்கையை இந்தியா கைவிட்டது.
1959 – வன்கார்ட் 3 விண்கலம் பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.
1960 – பிடல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
1961 – ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் காங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார்.
1962 – புருண்டி, ஜமேக்கா, ருவாண்டா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1972 – இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.
1973 – பகாமாசு, கிழக்கு செருமனி, மேற்கு செருமனி ஆகியன ஐநாவில் இணைந்தன.
1974 – சூறாவளி ஃபீஃபி ஒந்துராசைத் தாக்கியதில் 5,000 பேர் உயிரிழந்தனர்.
1976 – பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1977 – வொயேஜர் 1 விண்கலம் பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
1980 – சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு உருசியருடனும் விண்வெளி சென்றது.
1981 – பிரான்சில் மரணதண்டனையை நீக்கும் தீர்மானத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்தது.
1982 – லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
1988 – பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.
1990 – லீக்கின்ஸ்டைன் ஐநாவில் இணைந்தது.
1997 – அமெரிக்க ஊடகத் தொழிலதிபர் டெட் டேர்னர் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு $1 பில்லியன் பணத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
2006 – கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2007 – மியான்மரில் பௌத்த பிக்குகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.
2011 – 2011 சிக்கிம் நிலநடுக்கம் வடகிழக்கு இந்தியா, நேபாளம், பூட்டான், வங்காளதேசம், தெற்கு திபெத்து ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
2014 – ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் 55.3% இசுக்கொட்லாந்து மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.
2016 – இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் யூரி என்ற நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதைல் 19 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1709 – சாமுவேல் ஜோன்சன், ஆங்கிலேயக் கவிஞர், அகராதியியலாளர் (இ. 1784)
1908 – விக்தர் அம்பர்த்சுமியான், சார்ச்சிய-ஆர்மீனிய வானியலாளர் (இ. 1996)
1928 – பண்டரிபாய், தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2003)
1949 – விஷ்ணுவர்தன், இந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 2009)
1950 – சபனா ஆசுமி, இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி, நாடக நடிகை
1961 – ஜேம்ஸ் கண்டோல்பினி, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (இ. 2013)
1968 – உபேந்திரா, இந்திய நடிகர், பாடகர்
1973 – ஜேம்ஸ் மார்ஸ்டன், அமெரிக்க நடிகர்
1976 – ரொனால்டோ, பிரேசில் கால்பந்தாட்ட வீரர்
1979 – வினய், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1986 – பல்ஜிந்தர் சிங், இந்திய தடகள வீரர்
1989 – அசுவினி பொன்னப்பா, இந்திய இறக்கை பந்தாட்ட வீரர்

இறப்புகள்

1783 – லியோனார்டு ஆய்லர், சுவிசு கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1707)
1945 – இரட்டைமலை சீனிவாசன், ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் (பி. 1859)
1961 – டாக் ஹமாஷெல்ட், ஐநாவின் 2வது பொதுச் செயலர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவீடியர் (பி. 1905)
1966 – வித்துவான் க. வேந்தனார், ஈழத் தமிழறிஞர் (பி. 1918)
1967 – ஜான் கொக்ரொஃப்ட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1897)
1970 – ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க பாடகர் (பி. 1942)
1978 – ஆபிரகாம் கோவூர், இலங்கை, மலையாள உளவியலாளர் (பி. 1898)
1992 – முகம்மது இதயத்துல்லா, இந்தியாவின் 6வது குடியரசுத் துணைத் தலைவர் (பி. 1905)
2005 – ஆவாபாய் பொமாஞ்சி வாடியா, இலங்கை-இந்திய சமூக செயல்பாட்டாளர், எழுத்தாளர் (பி. 1913)
2011 – டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1929)
2018 – ராபர்ட் வெஞ்சூரி, அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1925)

சிறப்பு நாள்

எயிட்சு விழிப்புணர்வு நாள் (அமெரிக்கா)
உலக நீர் கண்காணிப்பு நாள்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply