வாழ்வின் எந்தத் தருணத்திலும், எந்த வயதிலும், உங்கள் மனம் விரும்பும் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பது எவ்வாறு? – Sudar FM

வாழ்வின் எந்தத் தருணத்திலும், எந்த வயதிலும், உங்கள் மனம் விரும்பும் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பது எவ்வாறு?

இந்த செய்தியைப் பகிர்க

நாம் அனைவரும் வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் நம் வாழ்க்கை இவ்வாறுதான் அமையவேண்டும் என கனவு காண்போம். ஆனால் காலவோட்டத்தில் அந்தக் கனவு வெறும் கனவாக மட்டுமே இருந்துவிடுகின்றது.

வாழ்வில் நாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கள், நமது சூழ்நிலைகள், என அனைத்தும் சேர்ந்து ஏதோவொரு வாழ்க்கையில் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அந்த வாழ்க்கை நமக்கு திருப்தியளித்ததோ இல்லையோ கிடைத்ததை வாழ்ந்து அந்தக் குறையுடனே மரணம்வரைச் செல்கின்றோம்.

நம் கனவு வாழ்க்கையை யாரோ ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்க, சூழ்நிலைக் கைதியாக ஒரு மூலையில் நாம் முடங்கிவிட வேண்டுமா? அதுதான் நமது தலைவிதியா?

நிச்சயமாக இல்லை.. இன்று நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், எந்த வயதில் இருந்தாலும் உங்கள் கனவு வாழ்க்கையை இன்றே வாழ ஆரம்பிக்க முடியும். அது எவ்வாறு?

1. உங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்யுங்கள்.

உண்மையிலேயே உங்கள் தேவை என்னவென்பதைக் கண்டறியுங்கள். அதில் அடுத்தவர்களின் விருப்பங்களைத் திணிக்காதீர்கள். உங்கள் மனம் எதை விரும்புகின்றது என்பதை மட்டும் செவிமடுங்கள். உங்கள் பெற்றோர்கள், மனைவி, நண்பர்கள், உறவினர்கள் அனைவரிற்கும் உங்கள் வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் இருக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கையை வாழப்போவது அவர்களல்ல. உங்கள் மனவருத்தத்தை நீங்கள் மட்டுமே அனுபவிக்கவேண்டும். உங்களிற்கு அறிவுரைகள் கூறும் யாராலும் அவற்றில் பங்கெடுக்க முடியாது. எனவே முதலில் உங்கள் தேவையைத் தெளிவாகக் கண்டறியுங்கள்.

2. முதல் படி

உங்கள் வாழ்க்கை வெறுமனே உங்களை மட்டும் சார்ந்ததல்ல. உங்களை நம்பி சிலர் இருக்கலாம். நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் அவர்களைப் பாதித்துவிடாதவாறு உங்கள் கனவு வாழ்க்கையை நோக்கிய முதல் படியை தைரியமாக எடுத்து வையுங்கள்.

3. இக்கணத்தை வாழுங்கள்.

இக்கணமே நிச்சயமானது. அதைத் திருப்திகரமாக வாழ முடியுமா எனச் சிந்தியுங்கள். உங்கள் ஓய்வு நேரங்களை இறந்தகால சம்பவங்களிலும், எதிர்கால சிந்தனைகளிலும் மூழ்கி வீணடிக்காது, உங்களுக்குத் திருப்தியளிக்கும் வேலைகளிலும், கனவையடையும் முயற்சியிலும் செலவுசெய்யுங்கள்.

4. சிறிது சிறிதாக முன்னேறுங்கள்.

நீங்கள் விரும்புவதையெல்லாம் ஒரே நாளில் அடைந்துவிட முடியாது. உங்கள் முயற்சிகள் வெற்றியடைய காலங்கள் செல்லலாம். எனவே உங்களின் தற்போதைய வேலைகளைச் செய்துகொண்டே நீங்கள் விரும்பும் வேலைகளையும் பகுதி நேரமாகச் செய்ய ஆரம்பியுங்கள். அவற்றிலிருந்து உடனடி வெற்றியை எதிர்பார்க்காமால் சிறிது சிறிதாக முன்னேறப் பாருங்கள்.

5. முயற்சி..

இது நீங்கள் அறிந்ததே.. அழுக்கான கைகளே சுத்தமான வாழ்வைக் கொடுக்கும். அனைத்திற்கும் முயற்சி தேவை. இங்கு அது இரட்டிப்பாகத் தேவை. இங்கு நீங்கள் வாழ்க்கைக்காக உழைக்கும் அதே சமயம், உங்கள் கனவுக்காகவும் உழைக்கவேண்டும். அடுத்தவர்களைவிட இருமடங்காக உழைக்கவேண்டும். பல தியாகங்கள் செய்யவேண்டும். இவற்றையெல்லாம் செய்ய முடிந்தால் மட்டுமே உங்கள் கனவு வாழ்க்கையை அடைந்துகொள்ளமுடியும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply