இந்த ஒரேயொரு யுக்தியைப் பின்பற்றுங்கள். எந்த வணிகமும் அசுரத்தனமான வெற்றியை அடையும். கூறுகின்றார் புகழ்பெற்ற கோடீஸ்வரர் Warren Buffett – Sudar FM

இந்த ஒரேயொரு யுக்தியைப் பின்பற்றுங்கள். எந்த வணிகமும் அசுரத்தனமான வெற்றியை அடையும். கூறுகின்றார் புகழ்பெற்ற கோடீஸ்வரர் Warren Buffett

இந்த செய்தியைப் பகிர்க

தினமும் நாம் பல கோடீஸ்வரர்களைக் கண்டு வியக்கின்றோம். அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை எண்ணிப் பெருமூச்சு விடுகின்றோம்.

நம்மைப்போலவே மிக எளிமையான சூழலிலிருந்து வந்த அவர்களால் மட்டும் எவ்வாறு இத்தனை எளிதில் பணம் சம்பாதிக்க முடிந்தது? அவர்கள் கையாளும் மந்திரம் என்ன? இவ்வாறு பல கேள்விகள் நம் மனதில் எழலாம்..

இந்தக் கேள்விகளுக்கான பதிலைக் கூறுகின்றார் பிரபல கோடீஸ்வரர் Warren Buffett..

தனித்து நில்லுங்கள்..

நீங்கள் வணிகம் செய்தாலும், அல்லது சினிமா விளையாட்டு என எத் துறையில் இருந்தாலும், யாரும் அடையாத வெற்றியை நீங்கள் அடைய விரும்பினால் அனைவரிலுமிருந்தும் தனித்து நில்லுங்கள்.

மற்றவர்கள் பயன்படுத்தும் அதே யுக்திகள், அதே வழிகளை நீங்களும் பயன்படுத்தினால், அவர்கள் அடைந்த அதே உயரத்தையே நீங்களும் அடைந்துகொள்ள முடியும்.

உங்கள் துறையில் புதிய முயற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கண்டறிந்து, உங்கள் போட்டியாளர்களைவிடச் சிறந்த தரத்துடன் அவற்றை நிவர்த்தி செய்யுங்கள்.

இதற்கு சிறந்த உதாரணமாக Uber நிறுவனத்தைக் குறிப்பிடலாம். Uber ஆரம்பித்த காலத்திலேயே பல்வேறு Taxi சேவைகள் இருந்தபோதும் அவற்றை வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டே பெற்றுவந்தார்கள். ஆனால் Uber நிறுவனமோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி Taxi துறையிலேயே ஒரு புதிய புரட்சியை ஆரம்பித்தது. வெறும் ஒரு App இன் மூலம் அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்களிற்கு வழங்கியது.

மற்றைய Taxi நிறுவனங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கார்களை Book செய்வதற்குப் பதிலாக தங்களின் Phone இலுள்ள ஒரு சிறு App இன் மூலம் தங்களிற்குத் தேவையான வாகனத்தை Book செய்துகொள்வது அனைவருக்கும் இலகுவாகத் தென்படவே அனைவரும் Uber நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். Uber உலகம் முழுக்கப் பரந்து விரிந்தது

எனவே உங்களுக்கான தனி வழியை உருவாக்கிக்கொள்ளுங்கள். புதிய யுக்திகளைக் கையாளுங்கள். அதுவே போட்டியாளர்களிடமிருந்து உங்களைத் தனிமைப்படுத்தி, உங்களுக்கு அசுரத்தனமான வெற்றியைப் பெற்றுத்தரும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply