நீங்கள் மிக விரைவில் மிகப்பெரும் வெற்றியை அடையவிருக்கின்றீர்கள் என்பதற்கு 5 அறிகுறிகள். – Sudar FM

நீங்கள் மிக விரைவில் மிகப்பெரும் வெற்றியை அடையவிருக்கின்றீர்கள் என்பதற்கு 5 அறிகுறிகள்.

இந்த செய்தியைப் பகிர்க

நம் வாழ்க்கை இவ்வாறுதான் அமையவேண்டுமென்ற எண்ணம் அனைவர் மனதிலும் குடியிருக்கும். சில சமயங்களில் அந்தக் கனவு வாழ்வை அடைய நாம் வருடங்களாகப் போராடியும், வெற்றியின் சாயலைக்கூட நுகர முடிவதில்லை.

நீங்கள் வெற்றிக்கான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கின்றீர்களா? என்பதைச் சில அறிகுறிகளை வைத்து உறுதிசெய்து கொள்ளலாம். இந்த அறிகுறிகள் உங்களிடமிருந்தால் நிச்சயம் மிக விரைவில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைந்துகொள்வீர்கள்.

1. உங்கள் பலவீனங்களை அறிந்து செயற்படுவீர்கள்.

நமது பலவீனத்தைக் கொண்டு என்றும் நம்மால் வெற்றிபெறமுடியாது. ஆனால் அதிகமான மக்களிற்கு தங்கள் பலம், பலவீனம் எது என்பது பற்றிய எந்த அறிவும் இருப்பதில்லை. அதனைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் முயற்சிப்பதில்லை.

நீங்கள் உங்கள் பலம், பலவீனம் எது என்பதை அறிந்து, பலத்தைக் கொண்டு வெற்றிபெற முயற்சி செய்துகொண்டிருந்தால், அந்த வெற்றி விரைவில் உங்கள் கையை வந்தடையும்.

2. நீங்கள் உண்மை என நம்புவதைச் செய்வீர்கள்.

பிறர் உங்கள் எண்ணங்களையோ செயல்களையோ கட்டுப்படுத்துவதை நீங்கள் அனுமதிக்கமாட்டீர்கள். ஒரு விடயம் வெற்றிபெறும் என உங்களிற்குத் தென்பட்டால் அதை முழுமையாக ஆய்வுசெய்வீர்கள். தகவல் திரட்டுவீர்கள். முடிவில் அது வெற்றிக்கான பாதையே என உறுதிசெய்து களத்தில் குதிப்பீர்கள்.

அதன்பின் எதற்காகவும் பின்வாங்காத மனநிலை உங்களிடம் இருக்கும். எண்ணியதை அடைந்த பின்னரே ஒய்வு என நீங்கள் முன்னேறிக்கொண்டேயிருப்பீர்கள்.

3. உங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்வீர்கள்.

ஒரு செயல் தவறு என உணரும்போது அதை தைரியமாக ஏற்றுக்கொள்வீர்கள். அதைவிட்டு பின்வாங்கிவிடுவீர்கள்.

உங்கள் மீது மற்றவர்கள் வைக்கும் விமர்சனங்களை ஆய்வுசெய்து, உண்மையில் நீங்கள் செய்வது தவறு என உணர்ந்தால் அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்வீர்கள். அதில் உங்களுக்கு எந்தத் தயக்கமும் கிடையாது.

4. உங்களிடம் அதிக பொறுமை இருக்கும்.

பொறுமை ஒருவரின் மனோபலத்தின் வெளிப்படையான அறிகுறி. பொறுமையுள்ள மனிதர்களால் எந்த சோதனையையும் எளிதாகத் தாங்கிக்கொள்ள முடியும்.

அவர்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் ஆறுதலாக, தெளிவுடன் செய்வார்கள். உடனடி விளைவை எதிர்பார்க்கமாட்டார்கள். வெற்றிகிடைக்கும்வரை தொடர்ந்து முயற்சி செய்வார்கள். இந்தப் பொறுமை உங்களிடமும் இருக்கும்.

5. நீங்கள் ஏற்கனவே களத்தில் இறங்கியிருப்பீர்கள்.

சோம்பேறித்தனம் மனிதவர்க்கத்தின் சாபக்கேடு . அது ஒருவனை முயற்சிசெய்யவிடாமல் தடுத்து அவன் வாழ்வையே வருத்தத்தில் தள்ளிவிடும்.

ஆனால் நீங்கள் அதிலிருந்து வெளியில் வந்திருப்பீர்கள். சொகுசான வாழ்க்கையிலிருந்து வெளியில் வந்து உங்கள் கனவிற்காக உழைக்க ஆரம்பித்திருப்பீர்கள். முயற்சியின் பெறுமதியை உணர்ந்திருப்பீர்கள். வெற்றியானது கடின உழைப்பின் பின்பே கிடைக்கும் என்பதை நம்புவீர்கள். அதனால் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பீர்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply