ஒரு வெற்றிகரமான வணிகத்தை நடத்திச்செல்ல விரும்புகின்றீர்களா? உங்கள் வெற்றிக்கு பிரபல கோடீஸ்வரர் Jack Ma கூறும் 3 அறிவுரைகள் – Sudar FM

ஒரு வெற்றிகரமான வணிகத்தை நடத்திச்செல்ல விரும்புகின்றீர்களா? உங்கள் வெற்றிக்கு பிரபல கோடீஸ்வரர் Jack Ma கூறும் 3 அறிவுரைகள்

இந்த செய்தியைப் பகிர்க

உங்களிடம் ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கின்றதா? அல்லது அதை ஆரம்பித்துவிட்டீர்களா? உங்களது வெற்றிக்காக அலிபாபாவின் நிறுவனரும் சீனாவின் முதன்மைக் கோடீஸ்வரருமான Jack Ma கூறும் பெறுமதிமிக்க 3 அறிவுரைகள்.

1. மக்களின் தேவை

ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும் முன், அதன்மூலம் மக்கள் என்ன பயனை அடைவார்கள் என்பதை ஆய்வுசெய்யவேண்டும். உங்கள் வணிகம் ஒரு குறிப்பிட்ட மக்களின் ஏதோவொரு பிரச்சனைக்குத் தீர்வாக அமையுமாயின் அதிக வாடிக்கையாளர்களைக் குறைவான நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

பொருட்கள், சேவைகளின் தரத்தை உயர்வாகப் பேணிக்கொள்ளுங்கள். அதுவே ஒரு வாடிக்கையாளரை மீண்டும் மீண்டும் உங்களிடம் அழைத்துவரும்.

வாடிக்கையாளர்களின் திருப்தியில் முடிந்தவரை கவனம் செலுத்துங்கள். அவ்வாறு திருப்தியடைந்த வாடிக்கையாளர்களே உங்கள் வணிகத்தை தங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்வார்கள்.

2. வருமானம்.

உங்களது வணிகம் எவ்வளவு வெற்றிகரமானதாக இருந்தாலும், அதை எத்தனை லட்சம் மக்கள் உபயோகித்தாலும் அதிலிருந்து நீங்கள் இலாபமடையவில்லையெனில் அனைத்தும் வீணானது

எனவே எவ்வாறு பணம் சம்பாதிக்கப் போகின்றீர்கள்? உங்கள் பொருட்கள், சேவைகளிற்கு எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்போகின்றீர்கள்? என்பதில் தெளிவாக இருங்கள்.

தேவையற்ற செலவுகளை மட்டுப்படுத்தி தினசரி கணக்கு வழக்குகளில் மிக அவதானமாக இருங்கள். ஏனெனில் அநேக வணிகங்கள் பார்வைக்கு இலாபகரமானதாக தோன்றினாலும், சரியான வரவு செலவு கணக்குகள் மூலமே அவற்றின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளலாம்.

3. கடுமையான போட்டி.

கடுமையான போட்டி உங்கள் வணிகத்தை அழித்துவிடப் போதுமானது. ஒரு வணிகத்திற்கு மிக அதிக போட்டியிருக்குமானால் அதில் நுழையாமலிருப்பதே சிறந்தது. அந்த வணிகத்தில் நுழைந்துதான் ஆகவேண்டுமெனில், உங்கள் பொருட்கள் சேவைகளில் தனித்துவம் பேணவேண்டும்.

தரத்தினை அதிகரிக்கவேண்டும். போட்டியாளர்கள் பயன்படுத்தாத யுக்திகளை நீங்கள் பயன்படுத்தவேண்டும். இந்த யுக்திகளே உங்களைப் போட்டியிலிருந்து சிறிது தள்ளிவைக்கும். என்கின்றார் Jack Ma.

மேலும் வாழ்வின் வெற்றிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook – LIKE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply