இன்றைய கவிதை – Sudar FM

இன்றைய கவிதை

இந்த செய்தியைப் பகிர்க

மனித வடிவில் தெய்வம்

ஊன் தந்தது இறைவன் என்றாய்
எனது உதிரம் உனதல்லவா!

கல்வி தருவது சரஸ்வதி என்றாய்
எனது மொழி உனதல்லவா!

கண்ணை காப்பது இமை என்றாய்
என்னை காப்பவள் நீயல்லவா!

கேட்பவை தருவது தெய்வம் என்றாய்
கேட்காமல் கொடுப்பவள் நீயல்லவா!

என்றும் அன்பே சிவம் என்றாய்
அன்பின் வடிவம் நீயல்லவா!

எங்கும் எதிலும் தெய்வமுண்டு என்றாய்
நிழலாக வரும்தெய்வம் நீயல்லவா!

கல்லில் இருப்பது கடவுள் என்றாய்
கண்முன் நிற்கும்கடவுள் நீயல்லவா!

எழுதியவர் : முத்துக்குமார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply