திருக்குறள் – Sudar FM

இன்றைய திருக்குறள் (22-07-2019)

குறள் 132: பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. கலைஞர் மு.கருணாநிதி உரை: எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும். மு.வரதராசனார் உரை: ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க... Read more »

இன்றைய திருக்குறள் (20-07-2019)

குறள் 131: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. மு.வரதராசனார் உரை: ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (19-07-2019)

குறள் 130: கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும். மு.வரதராசனார் உரை: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க... Read more »

இன்றைய திருக்குறள் (18-07-2019)

குறள் 129: தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. கலைஞர் மு.கருணாநிதி உரை: நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது. மு.வரதராசனார் உரை: தீயினால் சுட்ட புண் புறத்தே... Read more »

இன்றைய திருக்குறள் (17-07-2019)

குறள் 128: ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும்... Read more »

இன்றைய திருக்குறள் (16-07-2019)

குறள் 127: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும். மு.வரதராசனார் உரை: காக்க வேண்டியவற்றுள்... Read more »

இன்றைய திருக்குறள் (15-07-2019)

குறள் 126: ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும். மு.வரதராசனார் உரை: ஒரு பிறப்பில், ஆமைபோல்... Read more »

இன்றைய திருக்குறள் (13-07-2019)

குறள் 125: எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும். மு.வரதராசனார் உரை: பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்;... Read more »

இன்றைய திருக்குறள் (10-07-2019)

குறள் 124: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. கலைஞர் மு.கருணாநிதி உரை: உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும். மு.வரதராசனார் உரை: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு,... Read more »

இன்றைய திருக்குறள் (01-07-2019)

குறள் 123: செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். கலைஞர் மு.கருணாநிதி உரை: அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும். மு.வரதராசனார் உரை: அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால்,... Read more »