இன்றைய கவிதை (22-06-2019) – Sudar FM

இன்றைய கவிதை (22-06-2019)

இந்த செய்தியைப் பகிர்க

உன்மத்தம் உணர்திடும் உன் முத்தம்

மழைத்தூரல் நனைக்காத மரத்தடி
பூமிப் பரப்பின்
ஏக்கம்….

கடைசிப் பந்தியில் அமர்ந்திடும்
கல்யாண வீட்டாரின்
எதிர்பார்ப்பு….

மேற்கே உதிரும், அந்திமாலை
சூரியப் பூவின்
வாட்டம்….

கரையில் நின்று, கடலை ரசித்திடத் துடிக்கும் அலையின்
தவிப்பு…

வெறுச்சோடித் தெரிகின்ற
திருவிழா முடிந்த கோவில் தெருவின்
வெறுமை….

இவையாவும்
உணர்கிறேன்,
உன்மத்தம் உணர்த்திடும்
உன் முத்தம் – கிடைக்காத
உன்னவள்!!

எழுதியவர் : காதம்பரி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply