இன்றைய கவிதை (01-07-2019) – Sudar FM

இன்றைய கவிதை (01-07-2019)

இந்த செய்தியைப் பகிர்க

காதலில் கரைந்தவனின் கதறல்

மகிழ்கிறேன் வதைகிறேன்
குளிர்கிறேன் எரிகிறேன்
பறக்கிறேன் வீழ்கிறேன்
கனவுகளில் வாழ்கிறேன்
குறுக்கு வெட்டுத்தோற்ற
உணர்வுகளில் பதிகிறேன்.
நீ அங்குமிங்கும் வந்துபோனதில்
உண்டாகிப்போனது காதல்.
காதலில் நம்பிக்கையற்றவர்கள் காதை தயவுகூர்ந்து அடைத்துக் கொள்ளுங்கள்,
காதலில் கரைந்தவனின் கதறல் இப்படியும் இருக்கலாம்..!

எழுதியவர் : நேமா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply