நீங்கள் மிகவிரைவில் வெற்றிபெறப் போகின்றீர்கள் என்பதற்கு 7 அறிகுறிகள் – Sudar FM

நீங்கள் மிகவிரைவில் வெற்றிபெறப் போகின்றீர்கள் என்பதற்கு 7 அறிகுறிகள்

இந்த செய்தியைப் பகிர்க

வாழ்வின் வெற்றி…. மனிதனாய் பிறந்த அனைவரின் மனதிலும் இருக்கும் ஒரே ஆசை எப்படியாவது நாம் விரும்பும் வாழ்வைப் பெற்றுவிடவேண்டும் என்பதே. இதற்காக பலவருடங்கள் முயற்சி செய்துகொண்டிருப்போம். ஆனால் அந்த வெற்றி இன்னும் நமது கைக்கு வராமலிருக்கும்.

நாம் உண்மையிலேயே வெற்றிக்கான பாதையில்தான் செல்கின்றோமா? இல்லையா? என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கண்டுகொள்ளலாம். அவ்வாறான அறிகுறிகளையே இங்கு நாம் பார்க்கப்போகின்றோம்.

1. உங்கள் பலவீனங்களை அறிந்திருப்பீர்கள். அதற்கேற்ப உங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

நமது பலவீனத்தைப் பயன்படுத்தி என்றும் நம்மால் வெற்றிபெறமுடியாது. ஆனால் அதிகமான மக்களிற்கு தங்கள் பலம், பலவீனம் எது என்பதுபற்றிய எந்த அறிவும் இருப்பதில்லை. அதனைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் முயற்சிசெய்வதில்லை.

நீங்கள் உங்கள் பலம், பலவீனம் எது என்பதை அறிந்து, பலத்தைக் கொண்டு வெற்றிபெற முயற்சி செய்துகொண்டிருந்தால், அந்த வெற்றி விரைவில் உங்கள் கையை வந்தடையும்.

2. நீங்கள் தோல்வியைக் கண்டு பயம் கொள்ளமாட்டீர்கள்.

“நான் எவ்வளவு தோற்றாலும் வெற்றிபெறும்வரை தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருப்பேன்” என்கின்ற மனநிலை உங்களிற்கு இருக்குமாக இருந்தால் நீங்கள் தோல்வியைக் கண்டு தயங்கவில்லை என்று பொருள். உண்மையிலேயே தோல்வியடையும்போது உங்கள் மனம் தளரவில்லையெனில், உலகில் மிகக் குறைந்த மக்களுக்கே உள்ள, மிகப் பலமான ஆளுமை உங்களிடமுள்ளது. இந்த ஆளுமையே உங்களிற்கு மிக விரைவில் வெற்றியைப் பெற்றுத்தரும்.

3. நீங்கள் உண்மை என நம்புவதைச் செய்வீர்கள்.

அடுத்தவர் உங்கள் எண்ணங்களையோ செயல்களையோ கட்டுப்படுத்துவதை நீங்கள் அனுமதிக்கமாட்டீர்கள். ஒரு விடயம் வெற்றிபெறும் என நீங்கள் முழுமையாக நம்பினால் அதனைச் செய்வதில் எந்தவித தயக்கமும் காட்டமாட்டீர்கள். அதை இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் செய்ய நினைத்ததை செய்துமுடித்த பின்னரே உங்களிற்கு ஓய்வு.

4. உங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்வீர்கள்.

நீங்கள் ஒரு செயல் தவறு என உணரும்போது அதை தைரியமாக ஏற்றுக்கொள்வீர்கள். அதைவிட்டு பின்வாங்கிவிடுவீர்கள்.

உங்கள் மீது மற்றவர்கள் வைக்கும் விமர்சனங்களை ஆய்வுசெய்வீர்கள், உண்மையில் நீங்கள் செய்வது தவறு என உணர்ந்தால் அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்வீர்கள். அதில் உங்களிற்கு எந்த தயக்கமும் கிடையாது.

5. நீங்கள் களத்தில் இறங்கியிருப்பீர்கள்.

சோம்பேறித்தனம் மனிதவர்க்கத்தின் மிகப்பெரும் நோய். அது ஒருவனை முயற்சிசெய்யவிடாமல் தடுத்து அவன் வாழ்வையே வருத்தத்தில் தள்ளிவிடும்.

ஆனால் நீங்கள் அதிலிருந்து வெளியில் வந்திருப்பீர்கள். சொகுசான வாழ்க்கையிலிருந்து வெளியில் வந்து உங்கள் கனவிற்காக உழைக்க ஆரம்பித்திருப்பீர்கள். முயற்சியின் பெறுமதியை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். வெற்றியானது கடின உழைப்பின் பின்பே கிடைக்கும் என்பதை நம்புவீர்கள். அதனால் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பீர்கள்.

6. உங்கள் இதயத்தைப் பின்பற்றுவீர்கள்.

உங்கள் இதயம் சொல்வதைக் கேட்டு அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு மிகப்பெரும் தைரியம் வேண்டும். அது இலகுவான காரியமும் அல்ல. ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தைப் பின்பற்றி நடந்தால் நிச்சயமாக மிக விரைவில் வெற்றிபெறப்போகின்றீர்கள் என்று பொருள். ஏனெனில் உண்மையிலேயே உங்களிற்கு என்னவேண்டும், உங்களால் என்ன முடியும் என்பதை உங்கள் இதயம் மட்டுமே அறியும்.

7. உங்களிடம் அதிகமான பொறுமை இருக்கும்.

பொறுமை என்பது ஒருவரின் மனோபலத்தின் வெளிப்படையான அறிகுறி. பொறுமையுள்ள மனிதர்களால் எந்த சோதனையையும் எளிதாகத் தாங்கிக்கொள்ள முடியும். அவர்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் ஆறுதலாக, தெளிவுடன் செய்வார்கள். உடனடி விளைவு வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார்கள். வெற்றிகிடைக்கும்வரை தொடர்ந்து முயற்சி செய்வார்கள். இந்த இயல்புகளே இவர்களிடம் வெற்றியைக் கொண்டுவந்து சேர்க்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply