படிப்பை பாதியில் விட்ட பிரபல கோடீஸ்வரர்கள் – Sudar FM

படிப்பை பாதியில் விட்ட பிரபல கோடீஸ்வரர்கள்

இந்த செய்தியைப் பகிர்க

Steve Jobs, Bill Gates மற்றும் Mark Zuckerberg இதுபோன்ற உலகப் பிரபல்யம் பெற்ற பல கோடீஸ்வரர்கள் தங்கள் படிப்பைப் பாதியில் விட்டவர்களே என்பதை நீங்கள் அறிவீர்களா? இவர்கள் படிப்பை பாதியில் விட்டபின்னர் தங்கள் கனவு நிறுவனங்களை ஆரம்பித்தார்கள். அவற்றில் வெற்றியும் கண்டனர். பட்டப்படிப்பு ஒன்றை முடித்தால் மட்டுமே வாழ்வில் வெற்றியடையமுடியும் என்பது நமது சமூகத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கை. வெற்றிபெற பட்டப்படிப்பு தேவையில்லை முயற்சி ஒன்றே போதும் என்பதற்கு இந்த கோடீஸ்வரர்களைவிட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது.

மேலும் PayPal நிறுவனத்தின் இணை நிறுவனரும் பிரபல முதலீட்டாளருமான Peter Thiel, திறமை வாய்ந்த மாணவர்கள் தங்கள் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு தொழில் முயற்சியை ஆரம்பிப்பதாக இருந்தால் அவர்களிற்கு ஒரு லடசம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்குகின்றார். இதுதான் கோடீஸ்வரர்களிற்கு பட்டப்படிப்பு மீதுள்ள நம்பிக்கை.

சரி இவ்வாறு படிப்பை பாதியில் விட்டு உலக பிரபல்யம் பெற்ற கோடீஸ்வரர்கள் பட்டியலை நாம் இங்கு பார்க்கலாம்.

1. Michael Dell

Dell நிறுவனத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கணனிகள் வடிவமைப்பில் இன்றும் அசைக்க முடியாத நிறுவனம். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவரே இந்த Michael Dell. இவர் Texas பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஒரே வருடத்தில், அதனைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது இவரின் வயது 19. அதன் பின்னரே Dell நிறுவனத்தை ஆரம்பித்தார்.

சொத்து மதிப்பு :- 27.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (2018) – 197,800 கோடி இந்திய ரூபாய்கள்.

2. Steve Jobs

Steve Jobs, பிரபல Apple நிறுவனத்தை ஆரம்பித்தவர். படிப்பைத் தொடர போதிய பணம் இல்லாததால் தனது 19 ஆவது வயதில் படிப்பைக் கைவிட்டார். அதன் பின்பே தனது நண்பனுடன் சேர்ந்து உலகப் புகழ்பெற்ற Apple நிறுவனத்தை ஆரம்பித்தார். Apple நிறுவனத்தின் இன்றைய சொத்துமதிப்பு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகரித்துவிட்டது. இதுவே உலகில் அதிக பெறுமதியுள்ள நிறுவனமாக 2018 இல் பார்க்கப்படுகின்றது.

சொத்து மதிப்பு :- 10.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (2011 இல் இவர் இறக்கும்போது) – 73,370 கோடி இந்திய ரூபாய்கள்.

3. Bill Gates

Microsoft நிறுவனத்தை ஆரம்பித்தவர். Harvard பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 2 வருடத்தில் படிப்பைக் கைவிட்டவர். “Harvard’s most successful dropout” என பல்கலைக்கழக நிர்வாகிகளால் புகழப்பட்டவர். இன்று உலகின் இரண்டாவது செல்வந்தர்.

சொத்து மதிப்பு :- 90.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (2018) – 648,800 கோடி இந்திய ரூபாய்கள்.

4. Mark Zuckerberg

Facebook நிறுவனத்தை ஆரம்பித்தவர். இவர் Harvard பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே Facebook இணையதளத்தை ஆரம்பித்துவிட்டார். Facebook இனை நிர்வாகிப்பதற்கு போதிய நேரம் இல்லாமையினால் தனது படிப்பை பாதியில் விட்டார். படிப்பை விடவேண்டும் என்ற முடிவை இவர் வெறும் 5 நிமிட சிந்தனையிலேயே எடுத்துவிட்டாராம்.

சொத்து மதிப்பு :- 67.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (2018) – 482,650 கோடி இந்திய ரூபாய்கள்.

5. Jan Koum

WhatsApp நிறுவனத்தை ஆரம்பித்தவர். பட்டம் பெறுவதற்கு ஒரு சில மாதங்கள் முன் படிப்பைக் கைவிட்டவர். முதலில் Yahoo நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் தனது நண்பனுடன் சேர்ந்து WhatsApp நிறுவனத்தை ஆரம்பித்தார். 2014 இல் WhatsApp இனை Facebook 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதி கொடுத்து வாங்கியது.

சொத்து மதிப்பு :- 9.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (2018) – 69,053 கோடி இந்திய ரூபாய்கள்.

6. Travis Kalanick.

Uber நிறுவனத்தை ஆரம்பித்தவர். University of California, Los Angeles இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது, Scour என்ற தனது முதலாவது நிறுவனத்தை ஆரம்பிப்பதற்காக படிப்பைக் கைவிட்டார். அதன் பின்னரே Uber நிறுவனத்தை ஆரம்பித்தார்.

சொத்து மதிப்பு :- 5.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (2018) – 42,439 கோடி இந்திய ரூபாய்கள்.

8. Evan Williams

Twitter நிறுவனத்தை ஆரம்பித்தவர். தனது படிப்பு முடிவதற்கு ஒன்றரை வருடங்கள் முன்பு அதனைக் கைவிட்டார். பின்னர் Google, HP போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார். அதன்பின் தனது நண்பர்களுடன் சேர்ந்து Twitter நிறுவனத்தை ஆரம்பித்தார்.

சொத்து மதிப்பு :- 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். (2018) – 12,947 கோடி இந்திய ரூபாய்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply