திருக்குறள் – Sudar FM

இன்றைய திருக்குறள் (19-01-2019)

குறள் 44: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல மு.வ உரை: பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை. சாலமன் பாப்பையா உரை: பொருள் தேடும்போது... Read more »

இன்றைய திருக்குறள் (18-01-2019)

குறள் 43: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை மு.வ உரை: தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். சாலமன் பாப்பையா உரை: இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார்,... Read more »

Advertisement

இன்றைய திருக்குறள் (17-01-2019)

குறள் 42: துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை மு.வ உரை: துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான். சாலமன் பாப்பையா உரை: மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன் கலைஞர் உரை:... Read more »

இன்றைய திருக்குறள் (16-01-2019)

5. இல்வாழ்க்கை குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை மு.வ உரை: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். சாலமன் பாப்பையா உரை: மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர்... Read more »

இன்றைய திருக்குறள் (15-01-2019)

குறள் 40: செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி மு.வ உரை: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.... Read more »

இன்றைய திருக்குறள் (14-01-2019)

குறள் 39: அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல மு.வ உரை: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. சாலமன் பாப்பையா உரை: அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில்... Read more »

இன்றைய திருக்குறள் (13-01-2019)

குறள் 38: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் மு.வ உரை: ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். சாலமன் பாப்பையா உரை:... Read more »

இன்றைய திருக்குறள் (12-01-2019)

குறள் 37: அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை மு.வ உரை: பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. சாலமன் பாப்பையா உரை: அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக்... Read more »

இன்றைய திருக்குறள் (11-01-2019)

குறள் 36: அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை மு.வ உரை: இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும். சாலமன் பாப்பையா உரை: முதுமையில் செய்யலாம்... Read more »

இன்றைய திருக்குறள் (10-01-2019)

குறள் 35: அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் மு.வ உரை: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும். சாலமன் பாப்பையா உரை: பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள்... Read more »